இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து 3 வருடமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுகள் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்கள் படி 2016ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,016 வழக்குகள் ஊழல் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த ஊழல் வழக்குகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 22.9 சதவீதம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் சரிவு
இதில் நல்ல விஷயம் என்னவென்றால் கடந்த வருடத்தில் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 1,316 வழக்குகளும், 2015ஆம் ஆண்டில் 1,279 வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2016இல் 1,016 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவுக்குப் பின்..
ஊழல் குற்றங்களில் மகாராஷ்டிராவுக்குப் பின் ஒடிசா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
கிரைம்
இந்தியாவில் அதிகக் குற்றங்கள் நடைபெறும் இடமாக டெல்லி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் 19 முக்கிய நகரங்களில் கணக்கீடு செய்யப்பட்டபோது 40சதவீத கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 33 சதவீத குற்றங்கள் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இடம்
இப்பிரிவில் டெல்லிக்கு அடுத்தாகப் பெங்களுரூ மற்றும் மும்பை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications