விற்பனையில் 14.3% உயர்வு.. நவம்பரில் கலக்கிய மாருதி சுசூகி..!

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நவம்பர் மாதத்தில் 1,44,297 கார்களை விற்பனை செய்து சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்பு கார்களின் விலை அதிகரித்த காரணத்தால் இதன் விற்பனை குறைந்தது.

ஜூலை மாதத்திற்குப் பின் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டு வந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நவம்பர் மாதம் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

 மாருதி சுசூகி

மாருதி சுசூகி

இந்தியாவில் அதிகளவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்யும் மாருதி சுசூகி நவம்பர் மாதத்தில் அதிகளவிலான கார்களை விற்பனை செய்து 14.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

சிறிய கார்கள்

சிறிய கார்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் சிறிய ரகக் கார்களான ஆல்டோ மற்றும் வேகன்ஆர் மாடல் கார்களின் விற்பனை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

 காம்பெக்ட் கார்கள்

காம்பெக்ட் கார்கள்

இந்நிறுவனத்தின் காம்பெர்ட் ரகக் கார்களான சிப்ட், செலெரியோ, இக்னிஸ், பெலானோ, டிசையர், டூர் எஸ் ஆகியவற்றின் விற்பனை 32.4 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 65,447 கார்களை வரை விற்பனையில் உயர்வைக் கண்டுள்ளது.

4000 கார்கள்

4000 கார்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் வெற்றி அடைந்த கார்களில் ஒன்றான சியாஸ் நவம்பர் மாதத்தில் 26.2 சதவீத அளவிலான சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த வருடம் 5,433 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 யூட்டிலிட்டி பிரிவு

யூட்டிலிட்டி பிரிவு

சந்தையில் தற்போது பெரிய அதாவது யூட்டிலிட்டி பிரிவை சேர்ந்த கார்களின் விற்பனை சிறப்பாக உள்ள நிலையில், ஜிப்சி, எர்டிகா, பிரீசா மற்றும் எஸ் கிராஸ் ஆகிய கார்களின் விற்பனை 34 சதவீதம் வரையிலான உயர்வைச் சந்தித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+