உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் முன்னணி கல்லூரிகளில் அதிகளவிலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து இந்தியர்களின் திறமையை அள்ளிச் சென்று வருகிறது.
சத்ய நாடெல்லா சீஇஓவாக நியமிக்கப்பட்ட பின்பு இந்தியாவில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தேர்வாகும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான உயர்ந்துள்ளது என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், இந்த வருடம் மைக்ரோசாப்ட் ஒரு படி மேலே சென்று அனைத்துத் தரப்பினரும் வியக்கும் வகையில் அதிகப்படியான சம்பளத்தை அறிவித்துள்ளது.
ஐஐடி கல்லூரிகள்
நாட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இருக்கும் ஐஐடி கல்லூரிகளில் முதற்கட்ட தேர்வுகளை அனைத்தையும் முடித்துவிட்டு இன்று இறுதிக்கட்ட வளாகத் தேர்வுக்காக மைரோசாப்ட் நிறுவனம் ஐஐடி கல்லூரிகளுக்குச் சென்றுள்ள 2018ஆம் ஆண்டுப் பட்டம் பெறும் மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளது.
அமெரிக்காவில் வேலை..
இந்த வளாகத் தேர்வில் தேர்வான மாணவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ரெட்மாட் தலைமையலக அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
தற்போது விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்கா செல்வது கடினமாகியுள்ள நிலையில், மைக்ரோசாப்ட் இதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
ஐஐடி வளாகத் தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு 1.39 கோடி ரூபாய் சம்பளம் அளிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் வருடத்திற்கு 2,14,600 டாலர், இதில் அடைப்படை சம்பளமாக 1,08,000 டாலர், செயல்திறன் போனஸ் 21,600 டாலர், சேர்வதற்காகன போனஸ் 15,000 டாலர், விதிகளுக்கு உட்பட்ட 70,000 டாலர் மதிப்பிலான பங்குகள் அளிப்பதாக மைக்ரோசாப்ட் உறுதி அளித்துள்ளது.
தடாலடி உயர்வு..
கடந்த வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1,36,000 அமெரிக்க டாலர் அளவிலான சம்பளத்தை மட்டுமே கொடுத்த நிலையில் இந்த வருடம் 2,14,600 டாலராக உயர்த்தியுள்ளது.
யாருக்கு வாய்ப்பு அதிகம்..?
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போக ஐஐடி கான்பூர், ஐஐடி பாம்பே, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி ரூக்கி மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் வளாகத் தேர்வு நடத்தி வருகிறது.
மாற்றம்..
சில நேரங்களில் மாணவர்களின் திறன் நிறுவனங்களுக்குப் பிடித்து விட்டால் சம்பளம் மேலும் உயர்த்தப்படும். இதனால் தற்போது அறிவிக்கப்பட்ட 1.39 கோடி ரூபாய் சம்பளம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
உபர்
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்து உபர் டெக்னாலஜிஸ் 1,10,00 டாலர் அளவிலான அடிப்படை சம்பளம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் போனஸ் மற்றும் இதர அளவீடுகளில் மைக்ரோசாப்ட் விடக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்சங்
கொரிய நிறுவனமான சாம்சங் இந்த வருடம் 1,50,000 டாலர் அளவிலான சம்பளத்தை அளிக்க முன்வந்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பு படி 96.8 லட்சம் கோடி ரூபாய்.
பிற நிறுவனங்கள்
ரூப்ரிக் 1,15,00 டாலர், டவர் ரிசர்ச் 32-42 லட்சம் ரூபாய், ஆரக்கிள் 23 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications