1 ரூபாய் நோட்டுக்கு 100 வயது.. ஒரு பார்வை!

முதல் உலகப் போர் காலத்தில் நாணயம் தட்டுப்பாடு நிலவியதால் 1917-ம் ஆண்டு முதன் முறையாக 1 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டது.

தற்போது 2017 நவம்பர் மாதம் 30-ம் தேதியுடன் இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கு 100 வயதை எட்டியுள்ளது.

நிறுத்தம்

நிறுத்தம்

ஆர்பிஐ வங்கி இந்த 1 ரூபாய் நோட்டை அச்சிட அதிகச் செலவு ஆகிறது என்ற காரணத்திற்காக முதன் முறையாக 1926-ம் தேதி முதல் நிறுத்தியது. இதனால் அதிக மதிப்பு உள்ள கரண்சிகள் அதிகம் அச்சடிக்கப்பட்டன.

மீண்டும் அறிமுகம்

மீண்டும் அறிமுகம்

அதே நேரம் 1 ரூபாய் நோட்டுக்கள் மூன்று முறை அறிமுகம் செய்யப்பட்டு ஒவ்வொரு வடிவில் வந்தது. 1940-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த ரூபாய் நோட்டின் அளவையும் குறைத்தனர். 1949-ம் ஆண்டு அதில் ஆங்கிலக் குறியீடுகளையும் உட்புகுத்தினர்.

 அண்மையில் அறிமுகம்

அண்மையில் அறிமுகம்

பின்னர் இந்த 1 ரூபாய் நோட்டு மீண்டும் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ரூபாய் நோட்டினை ஆர்பிஐ வெளியிடவில்லை. இந்திய அரசு வெளியிட்டது.

ஆர்பிஐ கவர்னர்

ஆர்பிஐ கவர்னர்

பிற ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஒரு ரூபாய் நோட்டில் ஆர்பிஐ வங்கி கவர்னர் கையெழுத்தும் ஏதும் இருக்காது. இதனால் இந்த நோட்டிற்காக ஆர்பிஐ விழா ஏதும் எடுக்கவில்லை.

எதனால் 1 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது?

எதனால் 1 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது?

முதலாம் உலகப் போர் சமயத்தில் வெள்ளி விலை பெறும் அளவில் உயர்ந்ததால் அதற்கு இணையான நாணயம் தேவைப்பட்டதால் 1 ரூபாய் நோட்டு அச்சிட முடிவு செய்யப்பட்டது. அதனால் 1 ரூபாய் நோட்டில் 1 ரூபாய் நாணய படம் வருமாறு அச்சிடத் துவங்கினர்.

மீண்டும் அறிமுகம்

மீண்டும் அறிமுகம்

தற்போது இந்த 1 ரூபாய் நோட்டுக்கள் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் கூறி 2016-ம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது.

500 மற்றும் 2000 ரூபாய்

500 மற்றும் 2000 ரூபாய்

என்ன தான் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை நாம் இப்போது செலவு செய்து வந்தாலும் அந்தக் காலத்தில் நாம் 1 ரூபாய் நோட்டைச் செலவு செய்து பெற்ற ஆனந்தம் தனிச் சுவை தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+