இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் 5ஆம் தேதி தனது ஜியோ நிறுவன சேவைகள் மக்களுக்கு முழுமையாக அளிக்கத் துவங்கினார்.
அன்று முதல் ஜியோ உடன் போட்டிபோடும் விதமாகச் சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் கட்டணத்தைக் குறைப்பதையும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சிறிய நிறுவனங்கள் கைப்பற்றுவதும் எனப் பல வேலைகளைச் செய்து வந்தது.
இந்தப் போட்டியிலும் ஓட்டத்திலும் டெலிகாம் நிறுவனங்கள் தனது டிஸ்ட்ரிபியூட்டர்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
மிகப்பெரிய பாதிப்பு
இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் நாடு முழுவதும் சுமார் 80,000 டிஸ்ட்ரிபியூட்டர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
டெலிகாம் நிறுவனங்கள் விலை போர் உருவாகிய முதல் அனைத்து நிறுவனங்களும் வேலிடிட்டி நாட்கள், டேட்டா விலை, இலவச கால்கள் என ஆஃபர்களை அள்ளி வீசியது. இதனால் டிஸ்ட்ரிபியூட்டர்களின் வருமானம் இக்காலகட்டத்தில் 30-70 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
டிஜிட்டல் பரிமாற்றம்
பணமதிப்பிழப்புக்குப் பின் பெரும்பாலான மக்கள் இணைய வழியில் ரீசார்ஜ் செய்யத் துவங்கியுள்ள காரணத்தால் டிஸ்ட்ரிபியூட்டர்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு புள்ளி..
இதுநாள் வரையில் டெலிகாம் நிறுவனங்களினி சேவை மற்றும் மக்களை இணைக்கும் மற்றும் ஈர்க்கும் பொறுப்பை டிஸ்ட்ரிபியூட்டர்கள் செவ்வெனச் செய்து டெலிகாம் சேவை நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்களைச் சேர்த்து வந்தனர்.
ஆனால் இப்போது இவர்களின் வருமானம் 70 சதவீதம் வரையில் குறைந்துள்ளதால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர்.
பார்தி ஏர்டெல்
இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த முன்னணி ஏர்டெல் டிஸ்ட்ரிபியூட்டர்கள் ஒருவர கூறுகையில், கடந்த வருடம் மாதம் 3 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் கிடைத்து வந்த நிலையில் இந்த வருடம் 2 கோடி ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது.
டெலிகாம் சந்தை முழுவதுமாகச் சிதைந்துகிடக்கும் நிலையில், நான் வர்த்தகத்தை மூடினாலும் ஆச்சரியமில்லை. இவர் கட்டுப்பாட்டில் சுமார் 350 சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.
ஐடியா செல்லுலார்
இதேபோல் ஐடியா செல்லுலார் டிஸ்ட்ரிபியூட்டர் ஒருவரின் வருவாய் 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மற்றொரு சில்லறை விற்பனையாளர் கூறுகையில் மாதம் வருமானம் 1 லட்சத்தில் இருந்து 70,000 ரூபாய் வரையில் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
டெல்லியின் முன்னணி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் டிஸ்ட்ரிபியூட்டரின் வருவாய் 70 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1.5 கோடி ரூபாய் வரையில் வருமானம் பெறும் இவருக்குத் தற்போது 40 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாயாகப் பெறுகிறார்.
இதன் மூலம் லாபமும் 1.5 லட்சத்தில் இருந்து 60,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஊக்கத் தொகை
ஜியோ உருவாக்கிய விலை போரின் காரணமாக டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் அதிகளவில் குறைந்துள்ள நிலையில், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் ரீடெய்லர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகையும் அகிகளவில் குறைக்கப்பட்டு வருகிறது.
ஆட்குறைப்பு
டிஸ்ட்ரிபியூட்டர்களின் வருவாய் மற்றும் லாபம் அளவீடுகள் அதிகளவில் குறைந்துள்ள நிலையில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை 21இல் இருந்து 12ஆகக் குறைத்துள்ளனர்.
வாடிக்கையாளர் வருவாய்
டெலிகாம் சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர் வருவாய் அளவீடுகளில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜியோ அறிமுகத்திற்குப் பின் சராசரியாக ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருவாய் அளவு 40 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
செலவின குறைப்பு
இதனால் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொள்ளக் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 75,000 வேலைவாய்ப்புகளை முழுமையாக நீக்கியுள்ளனர். மேலும் இணைப்பு, டிஸ்ட்ரிபியூட்டர் குறைப்பு, சேவை அங்காடிகள் மூடல் ஆகியவற்றின் மூலம் இனி வரும் காலத்திலும் அதிகளவிலான ஆட்குறைப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
பலியாடு..
தற்போதைய நிலையைப் பார்க்கும் போது டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டியில் பாதிக்கப்பட்டுள்ளது இத்துறையில் இருக்கும் ஊழியர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும் தான்.
மொத்த கடன்
இன்றைய நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications