ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மாதாந்திர சம்பள உச்சவரம்பு இன்னும் சில நாட்களில் 21,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்திகளின் படி 15,000 ரூபாயாக உள்ள ஈபிஎப் கவர் 21,000 ரூபாயாக உயர்த்த இருப்பதாகக் கூறியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) 50% முதல் 3,000 கோடி வரை உயர்த்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
2014-ம் ஆண்டு
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி மீதான இந்த ஊழிய வரம்பு 2014 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போது தான் மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்கு முன்பு 6,500 ரூபாயாக இருந்தது 15,000 ரூபாயாக 2014-ம் ஆண்டு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஊதிய வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் தொழிலாளர் அமைச்சகம் இதனை 21,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
50 லட்சம் ஊழியர்களின் நிலை
ஈபிஎப் ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதால் முன்பு 4 கோடி ஊழியர்கள் சமுகப் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வந்ததில் மேலும் 50 லட்சம் சேருவார்கள் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் கூறுகிறது.
ஈபிஎப்
தற்போது 15,000 மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 1.16 சதவீதம் ஊதியத்தினை ஈபிஎஸ் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கி வருகிறது. ஊழியர்கள் 12 சதவீத அடிப்படை ஊதியத்தினை ஈபிஎப் திட்டத்தில் தங்களது பங்களிப்பாக அளித்து வருகின்றனர்.
அதே நேரம் நிறுவனம் சார்பாக 8.33 சதவீதம் ஈபிஎஸ் திட்டத்திற்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் திட்டத்திற்காகவும்


Click it and Unblock the Notifications