இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இடையில் நிலவி வரும் போட்டி காரணங்களால் உள்நாட்டு விமானப் பயணங்களுக்குப் பல விதமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இதனால் இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் விமான டிராப்பிக் டாப் 3 நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள ஆஃபர்கள் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
1,005 ரூபாய் விமான டிக்கெட்
இண்டிகோ நிறுவனத்தின் 1,005 ரூபாய் விமான டிக்கெட் பாக்தோ - குகஹாத்தி செல்லக் கிடைக்கிறது. ஜம்மு முதல் ஸ்ரீநகர் செல்ல 1,112 ரூபாய் விமான டிக்கெட் எனவும் இண்டிகோ அறிவித்துள்ளது.
சென்னை வழித்தடங்கள்
கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்ல 1,195 ரூபாய் விமான டிக்கெட் எனவும், கொச்சியில் இருந்து சென்னை செல்ல 1,215 ரூபாய் விமான டிக்கெட் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை காலம்
இண்டிகோ நிறுவனத்தின் சலுகை டிக்கெட்கள் அடுத்த மாதம் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் போது கிடைக்கிறது. அதே நேரம் போட்டி நிறுவனமான ஏர் ஏசியா 1,099 ரூபாய் முதல் விமான் டிக்கெட்டை 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 2019 வரையிலான பயணங்களுக்கு 2017 டிசம்பர் 10-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
டிக்கெட் எங்குக் கிடைக்கும்.
இண்டிகோ நிறுவனத்தின் விமான டிக்கெட்கள் goindigo.in என்ற இணையதளத்தில் இருந்தும், ஏர் ஏசியா விமான டிக்கெட் சலுகைகள் airasia.com மூலமாகவும் கிடைக்கும்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து
2017-ம் ஆண்டின் முதல் 10 மாதத்தில் அதாவது அக்டோபர் மாதம் வரை 954.45 லட்சம் பயணிகள் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையினைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இந்திய விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி 17.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications