எஃப்எம்சிஜி துறையில் கொடிகட்டி பறந்து வந்தாலும் நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் மீது சர்ச்சைக்குப் பஞ்சம் இல்லை என்று கூறலாம். சென்ற வாரம் நெஸ்ட்லே இந்தியா தாரிப்பான மேகி நூடல்ஸ் உணவுகளில் சாம்பல் கலந்து இருப்பதாகச் செய்திகள் வெளியானதில் இருந்து மேலும் பரபரப்பை ஏற்றியுள்ளது.
மீண்டும் சிக்கல்
சென்ற வாரம் உத்திரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்ட நிர்வாகம் மேகி பாகெட்டினை ஆய்வு செய்த போது அதில் சாம்பல் பொருட்கள் கலந்து இருப்பதாகவும், அதனால் தரக்கட்டுப்பாட்டினை மீறி இருப்பதாகவும் நெஸ்ட்லே நிறுவனம் மற்றும் அதன் விநியோகஸ்த்தர்களுக்கு அபராதம் விதித்தது.
மறுப்பு
ஆனால் நாங்கள் சாம்பல் போன்ற எந்தப் பொருட்களையும் மேகி நூடுல்ஸில் பயன்படுத்துவதில்லை என்று நெஸ்ட்லே இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுரேஷ் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
வழக்கு தொடர இருக்கிறோம்
மேலும் தங்களுக்கு ஷாஜஹான்பூர் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு மேகி நூடுல்சிஸ் சாம்பல் இருப்பதாகவும் அதனால் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்ட கடிதம் எங்களுக்கு வந்தது. இதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் உணவு கட்டுப்பாட்டுத் துறை விதித்துள்ள வழிமுறைகளும் குழப்பமாக உள்ளது, அது மட்டும் இல்லாமல் வழக்கு நீதிமன்றம் சென்று சந்திக்க உள்ளதாகவும் சுரேஷ் தெரிவித்தார்.
முந்தைய புகார் ஒரு பார்வை
இதற்கு முன்பு இதே போன்று அளவுக்கு அதிகமாக எம்எஸ்ஜி உப்பு மேகி உணவில் கலந்து இருப்பதாகவும் இதனால் தடை செய்யப்படுவதாகவும் வெளியான அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் இந்தத் தயாரிப்பினை மட்டும் வாப்பஸ் பெற்று பின்னர் 8 மாதங்கள் கழித்து மீண்டும் முறையான அனுமதியுடன் விற்பனையினை நெஸ்ட்லே துவங்கியது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications