சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசூகி குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு மட்டும் 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
மாருதி நிறுவனம் அதிகப்படியாக உற்பத்தி செய்துள்ளதால் அதிகக் கார்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் அதனை விற்றுத்தள்ளவே இந்தச் சலுகைகள் என்று நமக்குக் கிடைத்துள்ள விவரங்கள் கூறுகின்றன.
டிஸ்கவுண்ட் பட்டியலில் உள்ள கார்கள்
மாருதி தயாரிப்பான ஆல்டோ, வேகன் ஆர், ஸ்விப்ட் மற்றும் எர்டிகா கார்களை வாங்கும் போது இந்த டிஸ்கவுண்ட் ஆஃபர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு டிஸ்கவுண்ட்
மாருதி ஆல்டோ 800 ரகக் கார் வாங்குபவர்களுக்கு 35,000 ரூபாய் வரை டிஸ்கவுட்டும், ஸ்விப்ட் கார் வாங்குபவர்களுக்கு 30,000 ரூபாய் வரை டிஸ்கவுட்டும் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதுவே எர்டிகா டீசல் ரகக் கார் வாங்குபவர்களுக்கு 40,000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் அளிக்க உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரணம்
மாருதி நிறுவனம் சிறிய ரகக் கார் வகையில் ஆல்டோ மற்றும் வேகனார் உள்ளிட்டவையின் விற்பனை அக்டோபர் மாத 1.8 சதவீதம் சரிந்து 39,204 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதே நேரம் ஸ்விஃப்ட், செலீரியா, இக்னிஸ், பாலினோ, டிசையர் மற்றும் டூர் எஸ் ரகக் கார்கள் விற்பனை 32.4 சதவீதம் உயர்ந்து 65,447 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இதுவும் டிஸ்கவுண்ட் அளிப்பதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
சியாஸ்
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 5,433 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2017 ஆண்டு 26.2 சதவீதம் சரிந்து 4,009 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
பயன்பாட்டு வாகனங்கள்
ஜிப்சி, எர்டிகா, பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் போன்ற கார்களின் விற்பனை 34% உயர்ந்து 23,702 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வேன்
ஆமினி மற்றும் எக்கோ வேன் வகைக் கார்களின் விற்பனை 10.8 சதவீதம் உயர்ந்து 13,565 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள்
இந்த மாதத்தில் 1003 அலகுகள் இலகு ரக வாகனங்கள் அதாவது சூப்பர் கேரி டெம்போக்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications