டிசம்பர் மாதம் மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர்கள் விலை 713.50 ர்பாய் முதல் 759.50 ரூபாய் எனவும், மானியும் உள்ள சிலிண்டர்கள் விலை 483.69 முதல் 498.43 ரூபாய் எனவும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர் ஒன்றின் விலை 756 ரூபாய் எனவும், டெல்லியில் 747 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 766 ரூபாய் எனவும், மும்பையில் 719 ரூபாய் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் 14.2 கிலோ சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.

டிசம்பர் 1 முதல் மானிய விலை எல்பிஜி சிலிண்டர்கள் சென்னையில் 483.69 எனவும், டெல்லியில் 495.69 எனவும், கொல்கத்தாவில் 498.43 எனவும், மும்பையில் 493.38 எனவும் விற்பனை செய்து வரப்படுகிறது.
2017 நவம்பர் 1-ம் தேதி முதல் மானியம் இல்லா சிலிண்டர் விலை 94 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வீடுகளில் எல்பிஜி பயன்படுத்துபவர்கள் 14.2 கிலோ சிலிண்டரை மாதத்திற்கு 12 வரை மானிய விலையில் பெற்றுப் பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications