7வது சம்பள கமிஷன் குறித்து எப்போது செய்திகள் வெளிவந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, எச்ஆர்ஏ உயர்வு போன்ற இனிப்பான செய்திகளை எதிர்பார்க்கும் நிலையில் இந்த முறை சோகமான செய்தியாக இது உள்ளது.
நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி பாதுகாப்புத் துறை அமைச்சகம் முன்னாள் ராணுவ வீரிகளின் குழந்தைகளுக்கு அளித்து வந்த கல்விக்கான செலவுகளில் கட்டுப்பாட்டை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதை 7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது என்றும் தெரியவந்துள்ளது.
கடிதம்
முன்னாள் ராணுவ ஊழியர்கள் நல அமைப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் படி முன்னாள் ராணுவ வீரிகளின் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக மாதத்திற்குக் கல்வி மற்றும் விடுதிகள் கட்டணம் 10,000-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று மத்திய அரசு கேட்டு வருவதாகக் குறிப்பிட்டு இருந்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வட்டாரமும் இதற்கான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
நிர்மலா சீத்தாராமன்
இதனால் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவை உறுப்பினரான ராஜிவ் சந்திரசேகரப் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்குக் கல்வி மற்றும் விடுதி கட்டணத்திற்கான 10,000 ரூபாய் கட்டுப்பாட்டை விதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர்
இவர் மட்டும் இல்லாமல் பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங் மற்றும் முன்னாள் இராணுவத் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான வி.கே. சிங் அவர்களும் இந்த முடிவை மத்திய அரசு வாப்பஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன
எப்போது முதல் இந்தக் கட்டணம் அளிக்கப்படுகிறது
பங்களாதேஷின் விடுதலைக்கு வழிவகுத்த இந்தியா-பாக்கிஸ்தான் போருக்குப் பின்னர்ப் பாகிஸ்தானிய படைகள் தாகாவில் சரணடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 1971 டிசம்பர் 18 ஆம் தேதி மக்களவையில் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்குக் கல்வி கட்டணத்தினை அரசு ஏற்றது.
7 வது சம்பள கமிஷன்
மத்திய அரசு 48 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷனின் பரிந்துரையினை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் 34 திருத்தங்களுடன் செயல்படுத்தி வருகிறது.
அடிப்படை ஊதியம்
கொடுப்பனுவுகள் போன்றவற்றுக்கு 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் அளித்த நிலையில் அடிப்படை ஊதிய உயர்வு மட்டும் 21,000 ரூபாயாக மாற்ற இருப்பதற்கு நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடிப்படை ஊதிய உயர்வு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications