ஜியோ வெற்றிக்கு பிறகு முகேஷ் அம்பானி கைவைக்க இருக்கும் துறைகள் விவசாயம், கல்வி மற்றும் ஹெல்த்கேர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து டெலிகாம் துறையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தற்போது தனது அடுத்த வர்த்தக இலக்கை 3 முக்கிய துறைகள் மீது திருப்பியுள்ளார்.
இப்புதிய திட்டம் குறித்து முகேஷ் அம்பானியே தெரிவித்துள்ளார்.
முக்கியத் துறைகள்
நாங்கள் ஜியோவிற்குத் தேவையான அனைத்து முதலீடுகளைச் செய்து முடித்துள்ளதால் அடுத்த முதலீடுகள் குறித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அதிலும் கடிமான விவசாயம், முக்கியமான கல்வி மற்றும் மிகவும் கடினமான ஹெல்த்கேர் போன்ற துறைகளில் முதலீடு செய்ய இருப்பதாவும் தெரிவித்துள்ளார். இந்தத் துறைகளில் எல்லாம் எங்களால் என்ன செய்ய முடியும் என்று விவாதித்து வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.
ஜியோவில் செய்த முதலீடு எவ்வளவு?
சென்ற ஆண்டு மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மீது 3.9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள இணைப்பு
சென்ற வாரம் ஆங்கில நாளிதழ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற முகேஷ் அம்பானி ஜியோ சேவை துவங்கும் முன்பு பிராட்பேண்ட் இணைப்பில் 150 வது இடத்தில் இருந்த இந்தியா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது என்றார்.
அமெரிக்காவை கடப்போம்
ஜியோ சேவைக்காக நம்மைப் பலர் ஆதரிக்கவில்லை என்றாலும் 2019-ம் ஆண்டிற்குத் தரவு பயன்பாட்டில் ஜியோ உதவியுடன் நாம் அமெரிக்காவையே முந்த இருக்கிறோம் என்றார்.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனி மிட்டல் அவர்கள் நட்டத்திற்கு ஜியோ தான் காரணம் என்று கூறி வரும் நிலையில் டெலிகாம் துறை நட்டத்தில் செல்வதற்கு ஜியோவை சாடக் கூடாது என்று கூறியுள்ளார்.
நட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஒரு துறையில் லாபம், நட்டம் எல்லாம் ஏற்படும் என்ற ரிஸ்க் உடன் தான் முதலீடு செய்கிறோம், இதனை அரசு மற்றும் ஒழுங்கு முறை ஆணையங்கள் சீர் செய்ய வேண்டும் என்பது இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர் பெறும் நன்மையால் நாடு முன்னேறும், அதில் நமக்கு லாபம் அல்லது நட்டம் என ஏதுவாக இருந்தாலும் நாடு முன்னேற்றம் அடையும் போது நமக்கு லாபம் கிடைக்கும், எனவே நம்மைப் போன்ற பெறும் முதலாளிகள் லாபத்தினை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றார் அம்பானி.
தரவு பயன்பாடும், செயற்கை நுண்ணறிவும்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தரவு பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் புதிய தொழில் புரட்சி நடக்கும் என்றும் கூறினார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications