ஜெட் ஏர்வேஸ் நிறுவன 7 நாட்கள் அதிரடி விற்பனையாக வெளிநாட்டு விமானப் பயண டிக்கெட்களுக்கு 30 சதவீதம் சலுகையினைச் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கி வருகிறது. இந்தச் சலுகை விலையினைப் பயன்படுத்துக் குளிர்காலத்தில் வெளிநாடுகளும் பயணம் செய்து மகிழலாம்.
ஜெட் ஏர்வேஸ் வழங்கும் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் நேரடி விமானங்களில் மட்டுமே கிடைக்கிறது.
வழித்தடங்கள்
லண்டன், பாரிஸ், பாங்காக், ஹாங்காங், மற்றும் சிங்கப்பூர் வழித்தடங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வந்தாலும் துபாய், ஜெதா, குவைத், மஸ்கட், ரியாத், ஷார்ஜா, கொழும்பு, காத்மாண்டு மற்றும் டாக்கா உள்ளிட்ட வழித்தடங்களில் தான் நேரடி விமானச் சேவையினை வழங்கி வருகிறது.
வகுப்புகள்
ஜேட் ஏர்வேஸ் வழங்கும் சலுகை விலையில் பிரீமியர் மற்றும் எக்கானமி வகுப்பு டிக்கெட்கள் கிடைக்கின்றன.
சலுகை காலம்
2018 ஜனவரி 15 பிறகான பயணங்களுக்கு 7 நாட்கள் அதிரடி சலுகையான இதில் 2017 டிசம்பர் 5 முதல் 2017 டிசம்பர் 11 வரை டிக்கெட்கள் புக் செய்யலாம்.
நெகிழ்வு தன்மை
சலுகை விலையில் ஜெட் ஏர்வேஸ் டிக்கெட்களை விற்றாலும் பிற ஆஃபர்களைப் போன்று இல்லாமல் பயணத் தேதிகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியையும் அளித்துள்ளது.
டிக்கெட் புக் செய்வது எப்படி?
www.jetairways.com என்ற இணையதளம் மூலமாக அல்லது உங்களது நகர எஸ்டிடி குறியூட்டுடன் 39893333 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் சலுகை விலையில் டிக்கெட் புக் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications