ஆன்லைனில் மளிகை, காய்கறி, இறைச்சியை விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்தும் வெற்றி அடையமுடியாத நிலையில் இப்பிரிவில் பிக்பேஸ்கட் கொடிகட்டி பறந்து வருகிறது. பலரும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தபோது யாருக்கும் வளைந்துக்கொடுக்காமல் இருந்த பிக்பேஸ்கட் இந்தச் சீன நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிக்பேஸ்கட்
கடந்த சில வாரங்களாக அலிபாபா, பிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்தும், அதன் சேவையைப் பேடிஎம் தளத்தில் சேர்ப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது அலிபாபாவின் முதலீடு உறுதியாகியுள்ளது.
300 மில்லியன் டாலர்
முதலீட்டுக்கான பேச்சுவார்த்தை உறுதிசெய்யப்பட்ட நிலையில், சீனாவில் அலிபாபா பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 3இல் ஒரு பங்குகளில் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துச் சுமார் 300 மில்லியன் டாலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.
அமேசான்
இந்தியாவில் அலிபாபா நேரடியாக இறங்கவில்லை என்றால் பேடிஎம், பிக்பேஸ்கட் போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்து அமேசான் நிறுவனத்திற்கு எதிராக உலக நாடுகளில் தனக்கான ஒரு இடத்தைத் தொடர்ந்து பிடித்து வருகிறது.
மதிப்பு..
அலிபாபாவின் முதலீட்டுக்கான பிக்பேஸ்கட் நிறுவனத்தின் மதிப்பை ஆய்வு செய்தபோது இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சொத்துகளின் அடிப்படையில் இது 850 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
பேடிஎம் மால்..
பிக்பேஸ்கட் நிறுவனத்தில் அலிபாபா முதலீட்டில் இயங்கும் பேடிஎம் மால் நிறுவனமும் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அலிபாபா மற்றும் பேடிஎம் மால் ஆகியவை இணைந்து பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 35-40 சதவீத பங்குகளில் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
பிக்பேஸ்கட் நிறுவனம் சூப்பர்மார்கெட் கிராசரி சப்ளைஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
முதலீடு முறை..
முதல் கட்டமாக அலிபாபா நிறுவனம், பிக்பேஸ்கட் நிறுவனத்தில் 220 மில்லியன் டாலரை மட்டுமே முதலீடு செய்ய உள்ளது, மீதமுள்ள 80 மில்லியன் டாலரை அதன் தற்போதைய முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைப் பெறுவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பிக்பேஸ்கட் வெற்றி கதை..
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications