வங்கி திவால் ஆகும் போது உங்கள் பணம் என்ன ஆகும்?

வங்கிகளில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதா? இல்லையா? என்ற கேள்விகள் பலருக்கு வரும். வங்கி திவால் ஆனால் கண்டிப்பாகச் சேமிப்பு கணக்கு, ஆர்டி, எப்டி என நீங்கள் முதலீடு செய்து பணத்திற்குப் பாதிப்பு இல்லை எனலாம். அதற்காக நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு வங்கிகள் இன்சூரன்ஸ் அளிக்கின்றன.

சரி, இன்சூரன்ஸ் மூலமாக நீங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வைத்துள்ள மொத்த பணமும் உங்களுக்குக் கிடைத்து விடுமா? இல்லை குறிப்பிட்ட அளவிற்கு வரம்பு உள்ளது.

வரம்பு

வரம்பு

நீங்கள் அது என்ன வரம்பு என்று நீங்கள் கேப்டது எங்களுக்குத் தெரிகிறது. ஒரு வங்கி கணக்கில் சேமிப்பு கணக்கு, பிற சேமிப்புத் திட்டங்கள் என அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை நீங்கள் வைத்து இருந்தால் அந்தப் பணம் உங்களுக்குக் கிடைத்து விடும்.

எப்போது பாதிப்பு?

எப்போது பாதிப்பு?

இதுவே 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கூடுதலாக ஒரு ரூபாய் நீங்கள் வைத்து இருந்தால் அது கிடைக்காது. எனவே ஒரு வங்கி கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்வது பாதுகாப்பானது இல்லை. எனவே பிற வங்கிகளில் கணக்கு வைத்து அதில் டெபாசிட் செய்து வந்தால் பாதுகாப்பாக இருக்கும். இதற்காக ஒரே நேரத்தில் இரண்டு வங்கிகளும் திவால் ஆகவும் வாய்ப்பில்லை.

குளிர்காலக் கூட்டம்

குளிர்காலக் கூட்டம்

ஆனால் சில நாட்களில் துவங்க உள்ள குளிர்காலக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் கொண்டு வர உள்ள நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவை இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் நிலையில் பல விதமான செய்திகள் இணையத்தில் உலாவி வருகிறது.

 வதந்தி

வதந்தி

அதில் முக்கியமாவை நட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளை ஒன்றிணைப்பது. திவால் ஆகும் வங்கிகள் அளித்த கடனிற்கு டெபாசிட் செய்தவர்களின் பணத்தினைப் பயன்படுத்த போகிறார்கள் என்பது தான்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

ஒரு வங்கி துவங்கும் முன்பே குறிப்பிட்ட அளவிலான தொகையினை வங்கிகள் ஆர்பிஐ வங்கியில் டெபாசிட் செய்த பிறகு அனுமதிகள் அளிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் வங்கி திவால் ஆகும் அளவிற்கு எந்த வங்கிகளும் தற்போது கடன் அளிப்பதில்லை. அப்படியே திவால் ஆகினாலும் ஆர்பிஐ வங்கியில் டெபாசிட் செய்த தொகை உள்ளது.

கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகள்

இந்தியாவில் இது வரை கூட்டுறவு வங்கிகள் தான் அதிகளவில் திவால் ஆகியுள்ளன. மத்திய அரசும் வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றே கூறி வருகிறது.

காத்திருங்கள்

காத்திருங்கள்

இன்றும் கூட அருண் ஜேட்லி புதிய மசோதாவால் வங்கி டெபாசிட் பணத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது என்று உறுதி அளித்துள்ளார். எனவே இன்னும் சில நாட்கள் காத்திருந்து பார்ப்போம் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. அது வரை இதுபோன்ற புரளிகளை நம்பிப் பயப்பட வேண்டாம் என்பதே நமது கருத்து.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+