பெங்களூரு: இரண்டு சக்கர வாகன டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வியாழக்கிழமை 14.78 சதவீத பெங்களூரு அல்ட்ராவொய்லெட்டே ஆட்டோமோடிவ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்தப் பரிவர்த்தனையின் மதிப்பு 5 ஒடி ரூபாய் நெறு டிவிஎஸ் நிறுவனம் பங்கு சந்தையில் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது.
அல்ட்ராவொய்லெட்டே நிறுவனம்
பங்கு சந்தையில் தாக்கல் செய்துள்ளதில் அல்ட்ராவொய்லெட்டே ஸ்டார்ட் அப் நிறுவனம் 3.21 லட்சம் வருவாயினை 2016-2017 நிதி ஆண்டில் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இது வரை மூன்று முன்மாதிரிகளைச் சோதனை செய்துள்ளதாகவும், இதுவரை எந்த எலக்டிரிக் பைக்கையும் சந்தையில் அறிமுகம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
துவக்கம்
2015-ம் ஆ ஆண்டுப் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அல்ட்ராவொய்லெட்டே நிறுவனம் பொறியியல் கல்லூரி மாணவர்களான நீரஜ் ராஜ்மோகன் மற்றும் நாராயண் சுப்ரமனியம் இருவரால் உருவாக்கப்பட்டது ஆகும்.
ஹீரோ மொட்டோ கார்ப்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஈவி டெக்னாலஜி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ளதை அடுத்து அதற்குப் போட்டியாகவே டிவிஎஸ் நிறுவனமும் அல்ட்ராவொய்லெட்டே நிறுவனத்தில் முதலீடு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது
அதேர் எஸ்340
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் பெங்களூருவை சேர்ந்த எலெக்டிரிக் பைக் நிறுவனமா ஈவி டெக்னாலஜியில் 205 கோடி ரூபாயினை 2016-ம் ஆண்டு முதலீடு செய்துள்ளது. இந்த ஈவி அதேர் எலக்டிரிக் நிறுவனம் அதேர் எஸ்340 பைக்கினை பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்து 2018-ம் ஆண்டு முதல் உற்பத்தியினைத் துவங்க உள்ளது
போட்டி நிறுவனங்கள்
மறு பக்கம் டிவிஎஸ் நிறுவனம் யூ218 எலெக்டிரிக் வாகனத்தினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் பஜாஜ், ஹோண்டா, மகேந்திரா, யமஹா போன்ற பிற போட்டி நிறுவனங்களும் எலெக்டிரிக் வாகனங்களை 2018-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளன.
மத்திய அரசின் இலக்கு
2030-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எலெக்டிரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கிற்கு ஏற்றபடி டாடா மற்றும் மகேந்திரா போன்ற கார் நிறுவனங்கள் போன்று இரண்டு சக்கர வாகன நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது முக்கியமானது. ஆனால் இந்தத் துறை குறித்து ஆய்வு செய்து இந்த நிறுவனங்கள் இறங்க வேண்டும் என்பதும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications