வாட்ஸ்அப் இன்று அனைத்துத் தரப்பினர்களிடமும் சென்றடைந்துள்ளது, குறிப்பாக வீட்டுப் பெண்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என வர்த்தகத்தைக் கொண்டு சேர்க்க முடியாத முக்கியமான பிரிவு மக்களிடமும் சென்றுள்ளது. இதை நீங்கள் பேஸ்புக் உடனும் ஒப்பிடலாம்.
இத்தகையைச் சூழ்நிலையில் வாட்ஸ்அப் செயலியை வர்த்தகத்திற்காகப் பயன்படுத்த பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு வந்த வாட்ஸ்அப் நிர்வாகம் தற்போது உறுதியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆசிய சந்தை
வாட்ஸ்அப் தளத்தை வர்த்தகத்திற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை விடவும் ஆசியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை மைய கருத்தாகக் கொண்டு பேஸ்புக் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப் வர்த்தகத்திற்காகத் தனியாக ஒரு சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
கேள்விகள்
சமீபத்தில் வாட்ஸ்அப் தளத்தில் வெளியிடப்பட்ட FAQ-வில், சாதாரண வாட்ஸ்அப் கணக்குகளுக்கும், வர்த்தக நிறுவனங்களின் கணக்குகளுக்கும் எப்படி வித்தியாசம் காண்பது என்ற கேள்விக்கு.
வர்த்தகக் கணக்கிற்குப் பச்சை நிற டிக் குறியீடு இருக்கும் என அறிவித்துள்ளது, இதன் வாயிலாகவே வாட்ஸ்அப் நிறுவனத்தின் வர்த்தகக் கணக்குகள் குறித்த முயற்சிகள் உறுதியாகியுள்ளது.
பச்சை நிற டிக் குறியீடு
இந்தக் குறியீடு பெற வேண்டும் என்றால் அந்தக் கணக்குத் தத்தம் நிறுவனத்துடையது என்பதை உறுதி செய்யப்பட்ட பின்பே வெரிபைடு தகுதி வழங்கப்படும்.
சோதனை
உலக நாடுகளில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வர்த்தகச் செயலிகள், தற்போது சில முக்கியச் சோதனையார்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இதனை வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்ற பெயரில் வெளியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications