ஜப்பானின் சாப்ட் பாங்க் முதலீட்டில் இயங்கி வரும் ஓயோ வெள்ளிக்கிழமை அதன் வணிக மாதிரியை அக்ரிகேஷனில் இருந்து பிரான்ச்சிஸ்களாக மாற்றுவதாக அறிவித்துள்ளது.
ஓயோ ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் தனது செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதற்காக அக்ரிகேஷன் மாடல் வணிகத்தில் இருந்து ஃபிரான்ச்சிஸ் மாடலாக மாற்றிச் சேவையினைத் தரம்படுத்த முடிவு செய்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது வணிகத்தினை 100 சதவீத பிரான்ச்சிஸ் நிறுவனமாக மாற்றியுள்ளது என்றும் அக்ரிகேஷன் மாடலில் இனி ஓயோ வர்த்தகத்தினைச் செய்யப் போவதில்லை என்று அன்மையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறினார்.
விடுதுகளில் ஒரு ஓயோ கேப்ட்டனுடன் 5 முதல் 15 அறைகள் உள்ளதால் செலவுகள் அதிகம் ஆகிறது. எனினும் முழுமையான ஒரு விடுதி என்றாலும் இதே கிட்டத்தட்ட இதே செலவு தான் ஆகிறது எனவே சேவைக்கான செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரான்ச்சிஸ் முடிவை ஓயோ எடுத்துள்ளதாக நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications