டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 22% ஆக உயர்வு..!
டாடா மோட்டாஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்களின் சர்வதேச மொத்த விற்பனை மற்றும் டாடா தாவூ வகை வாகனங்கள் 2017 நவம்பர் மாதம் 40,845 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 51 சதவீதம் கூடுதல் விற்பனை ஆகும்.

இதுவே பயணிகள் வாகன பிரிவில் சென்ற ஆண்டு விற்பனை செய்யப்பட்ட 71,628 வாகனங்கள் உடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரிட்டிஷ் பிரிவான ஜாகுவார் லேண்ட் ரோவர் 54,244 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 12,287 வாகனங்களை ஜாக்வார் பிரிவிலும், 41,957 வாகனங்களை லேண்டு ரோவர் பிரிவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications