28 கணக்குகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்.. வங்கிகள் பிடிவாதம்..!

இந்தியாவில் பல நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் பெற்றுத் திரும்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனைக் களைய நிறுவனங்களைத் திவாலாக அறிவிக்கப்பட்டுச் சொத்து மற்றும் இதரவற்றைப் பறிமுதல் செய்து பணத்தைப் பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது

இதன் வாயிலாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட இரண்டாவது பட்டியலில் இருக்கும் நிறுவனங்களைத் திவாலாக அறிவிக்கும் பணியிலும் வங்கிகள் நிறுவனங்களின் கணக்குகளை மறுசீரமைப்புச் செய்ய டிசம்பர் 13ஆம் தேதியே கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்பிஐ இறுதி முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை.

வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உட்படச் சுமார் 28 நிறுவனங்களின் கணக்குகள் குறித்த இறுதி முடிவை விரைவாக அறிவிக்கும் படி ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி அளித்து வருகிறது வணிக வங்கிகள்.

டிசம்பர் 13

டிசம்பர் 13

குறிப்பிட்ட தேதிக்குள் வங்கிகள் கடன் கொடுத்த 28 நிறுவனங்களின் கணக்குளை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். இல்லையெனில் திவாலான அறிவிக்கப்படுவதின் அடுத்தகட்ட பணிகளைச் செய்ய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் சென்று விடும்.

இதனால் என்ன..?

 

50 சதவீத தொகை..

50 சதவீத தொகை..

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகச் சென்றால் வங்கிகள் கடன் கொடுத்த அளவீட்டில் 50 சதவீத தொகையைக் கொடுத்தாக வேண்டும். இதனால் வங்கிளின் வருவாய் மற்றும் லாப அளவீட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாக வங்கிகளின் பங்கு மதிப்பும் குறையும்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

தற்போது வங்கிகள் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், உத்தம் கல்வா ஸ்டீல், பிஐஎல்டி, ஜெய் பாலாஜி ஆகிய நிறுவனங்கள் குறித்து முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. மேலும் ருச்சி சோயா, ஆர்சிட் பார்மா, உத்தம் கல்வா மெடாலிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஏற்கனவே திவாலாக அறிவிக்கப்படும் பணிகளைக் குறித்த நாளான டிசம்பர் 13க்குள்ளேயே துவங்கப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கடன் அளவு

கடன் அளவு

28 நிறுவனங்களில் அதிகப்படியாகக் கடன் பெற்றுள்ளது வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் தான், இந்நிறுவனம் பெற்ற கடனில் இன்னமும் 43,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது. இத்தொடர்ந்து ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 26,000 கோடி ரூபாய் தொகை நிலுவையில் உள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

ஜூன் மாதம் ஆர்பிஐ விசாரித்த அதிகளவிலான கடன் நிலுவையில் உள்ள 12 நிறுவனங்களின் கணக்குகளை நேரடியாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் திவாலாக அறிவிக்கும் பணிகளைச் செய்ய ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து ஆர்பிஐ வெளியிட்ட 2வது பட்டியலில் இருக்கும் 28 வங்கி கணக்குகளை மறுசீரமைப்புச் செய்யக் கால அவகாசம் அளித்தது. டிசம்பர் 13க்குள் இந்நிறுவனங்களுக்கான இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் இல்லையெனில் டிசம்பர் 31க்குள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் சென்றுவிடும்.

 

அடுத்தகட்ட நடவடிக்கை..

அடுத்தகட்ட நடவடிக்கை..

ஏற்கனவே திவாலாக அறிவிக்கப்பட தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் சில நிறுவனங்கள் சென்றுள்ள நிலையில், தற்போது ஏசியன் கலர் கோடெட், ஐவிடிஆர்எல், சக்தி பேக், வீடியோகான் டெலிகாம், எஸ்ஸார் பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் செல்ல உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

 வங்கித்துறை முதலீட்டாளர்கள்

வங்கித்துறை முதலீட்டாளர்கள்

இத்தகைய சூழ்நிலையில் வங்கித்துறை பங்குகள் பெரிய அளவிலான சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதுமட்டும் அல்லாமல் இத்துறையில் மீதான முதலீடும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

எனவே இத்துறை முதலீட்டாளர்கள் சற்றுக் கவனமாகச் செயல்பட வேண்டும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+