கடன் வெள்ளத்தில் மிதக்கும் அம்பானியும், அதானியும்.. மோடி அரசு என்ன செய்யப்போகிறது..?

இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரித்துள்ளதால் சில வங்கிகளே திவாலாக நிலையில் முடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களின் அளவுகளைப் பார்த்தால் நீங்களே ஆடிப்போயிருவிங்க. குறிப்பாக மோடியின் நண்பர்களான அம்பானி மற்றும் அதானிகளிடம் கொடுக்கப்பட்ட கடன் அளவைப் பாருங்கள்.

ரிலையன்ஸ் இன்பரா

ரிலையன்ஸ் இன்பரா

அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் 12,600 கோடி ரூபாய் அளவிலான கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

 டாடா பவர்

டாடா பவர்

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது.

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ்

இந்திய டெலிகாம் துறையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இன்றைய நிலைக்குச் சுமார் 14,283.26 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. சமீபத்தில் இதன் வர்த்தகத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்

ரிசர்வ் வங்கி திவாலாக அறிவிக்கும் பணியில் இறங்கியுள்ள முக்கியமான நிறுவனங்களில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் சுமார் 18,263.85 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.

அதானி போர்ட்ஸ்

அதானி போர்ட்ஸ்

ஷிப்பிங் மற்றும் கட்டுமான துறை நிறுவனமான அதான் போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை எல்லாம் கட்டமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்றையே தேதி வரை 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது.

 டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா குழுமத்தின் மற்றோறு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வரை 19,511.56 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ்

வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 19,511.56 கோடி ரூபாய் கடன் உள்ளது.

 அலோக் இன்டஸ்ட்ரீஸ்

அலோக் இன்டஸ்ட்ரீஸ்

டெக்ஸ்டைல்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான அலோக் இன்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது.

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்

அலுமினிய மற்றும் செப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,621.93 கோடி ரூபாய் கடன் உள்ளது.

ஜிண்டால் ஸ்டீல்

ஜிண்டால் ஸ்டீல்

அதிகக் கடன் வாங்கியுள்ள தனியார் நிறுவன பட்டியலில் இது 5வது ஸ்டீல் நிறுவனமாக ஜிண்டால் ஸ்டீல் உள்ளது. ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்றைய தேதியில் 24,163.34 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.

அதானி பவர்

அதானி பவர்

மோடியின் நண்பருமான கவுதம் அதானி அவர்களுக்கு எஸ்பிஐ வங்கி கடந்த சில ஆண்டுகளாகக் கடனை வாரி வழங்கி வருகிறது எனலாம். அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் இன்றைய தேதி வரை 25,274.19 கடன் உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

கடனில் சிக்கி தவித்து இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557.00 கோடி ரூபாய் கடன் உள்ளது.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

ஐந்தாவது இடத்திலும் ஸ்டீல் நிறுவனமே உள்ளது. ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமத்திற்குச் சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்று வரை 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது.

ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம்

ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம்

அதிகக் கடன் வாங்கியுள்ள தனியார் நிறுவன பட்டியலில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடம் தொடர்ந்து ஸ்டீல் நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பது ஆச்சர்யமான உள்ளது. இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா

வேதாந்தா

உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

பூஷன் ஸ்டீல் நிறுவனம்

பூஷன் ஸ்டீல் நிறுவனம்

கடந்த ஒரு ஆண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 46,262.23 கடன் உள்ளது. இந்தக் கடனை பல் வேறு வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 101,303 கோடி ரூபாய் கடன் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் ஜியோ நிறுவனத்திற்காக 1.9 லட்சம் கோடி ரூபாயினை ரிலையன்ஸ் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

பொதுதுறை நிறுவனங்களின் அதிரவைக்கும் கடன் அளவு..!

பொதுதுறை நிறுவனங்களின் அதிரவைக்கும் கடன் அளவு..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+