மத்திய அரசுக்கு தலைவலியாக இருக்கும் பொது துறை நிறுவனங்கள்..!

தனியார் நிறுவனங்கள் ஒரு பக்கம் வங்கிகளில் இருந்து கடன் வாங்கியுள்ள அதே வேலையில் பொதுத் துறை நிறுவனங்களும் அதிகளவில் கடன்களைப் பெற்றுள்ளன.

பொதுத் துறை நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதினால் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகியது மட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு வித்திட்டதும் பொதுத்துறை நிறுவனங்கள் தான். ஆனால் இன்று தனியார் நிறுவனங்களின் அதீத ஆதிக்கத்தின் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அளவுகள் அதிகளவில் குறைந்து தொடர்ந்து அரசின் நிதியுதவியை மட்டும் நம்பி இயங்கி வருகிறது. இதுவும் வங்கிகளுக்கு சுமையாகவே பார்க்கப்படுகிறது.

அதீத கடன் சுமையால் வங்கிகள் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு எப்ஆர்டிஐ மசோதா மூலமாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் எதிர்ப்புகளும் பெறும் அளவில் இந்தத் திட்டத்திற்கு எழுந்துள்ளது.

ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன் பட்டியலை இங்குப் பார்த்துள்ள நாம் அரசு நிறுவனங்கள் வாங்கிய கடன் அளவினை பார்ப்போம்.

பவர் கிரிடு கார்ப்ரேஷன் ஆப் இந்தியா

பவர் கிரிடு கார்ப்ரேஷன் ஆப் இந்தியா

பொதுத் துறை நிறுவனமான பவர் கிரிடு கார்ப்ரேஷன் ஆப் இந்தியா இந்தியாவின் மொத்த பவர் உற்பத்தியில் 50 சதவீதத்தினைப் பவர் கிர்டு மூலம் டிரான்ஸ்மிட் செய்ய உதவுகிறது. பவர் கிரிடு கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 12,463.17 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இது அம்பானி வாங்கியுள்ள கடனை விட அதிகமாகும்.

என்டிபிசி

என்டிபிசி

தேசிய தெர்மல் பவர் நிறுவனமான என்டிபிசி-ம் ஒரு இந்திய பொதுத் துறை நிறுவனமாகும். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக அரசு நிறுவனமான என்டிபிசி 100,339.84 கோடி ரூபாய் கடனை வாங்கியுள்ளது.

 இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்

இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் 50,384.80 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா

தனியார் ஸ்டீல் நிறுவனங்களைப் போன்று பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனமும் 38,900.52 கோடி ரூபாய் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றுள்ளது.

என்எச்பிசி

என்எச்பிசி

தேசிய ஹைட்ரோ-எலக்டிரிக் பவர் கார்ப்ரேஷன் எனப்படும் என்எச்பிசி நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து மட்டும் 17,548.14 கோஇ ரூபாய் கடன் பெற்றுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இன்றைய தேதி வரை 17,170.56 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்டிஎன்எல்

எம்டிஎன்எல்

மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் டெலிகாம் சேவை அளித்து வரும் எம்டிஎன்எல் நிறுவனம் 14,921.55 கோடி ரூபாய் கடனில் உள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

கடன் பட்டியலை பார்க்கும் அனைத்துப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு மும்பை பங்கு சந்தை கணக்கின் படி 13,709.65 கோடி ரூபாய் கடன் உள்ளது.

ஆயில் இந்தியா லிமிடெட்

ஆயில் இந்தியா லிமிடெட்

இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய ஹைட்ரோ கார்பன் ஆய்வு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் 8,947.53 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

கடன் வெள்ளத்தில் மிதக்கும் நிறுவனங்கள்

கடன் வெள்ளத்தில் மிதக்கும் நிறுவனங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+