கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.1,218 முதல் விமான பயணம்..!

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் குறிப்பிட்ட வழித்தடங்களில் 1,218 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

கோஏர் நிறுவனம் வழங்கும் இந்தச் சலுகையில் அகமதாபாத்-மும்பை, புனே-பெங்களூர், ஹைதராபாத்-பெங்களூர், சென்னை-மும்பை, டெல்லி-ஸ்ரீநகர், டெல்லி-மும்பை, புனே-டெல்லி மற்றும் சென்னை-போர்ட் பிளேர் வழித்தடங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.

சலுகை காலம்

சலுகை காலம்

குறைந்த காலச் சலுகையாக வந்துள்ள கேஏர் நிறுவனத்தின் விமான டிக்கெட்களை 2018 ஜனவரி 10 முதல் 2018 மார்ச் வரையிலான பயணங்களுக்கு 2017 டிம்சபர் 15 வரை புக் செய்யலாம்.

 கோஏர் செயலி

கோஏர் செயலி

கோஏர் நிறுவனத்தின் செயலி மூலம் விமான டிக்கெட் புக் செய்பவர்கள் 'GOAPP10' என்ற விளம்பர குறியீட்டை பயன்படுத்தும் போது கூடுதலாக 10 சதவீதம் சலுகையினைப் பெற முடியும்.

வழித்தடங்கள் மற்றும் டிக்கெட் விலை

வழித்தடங்கள் மற்றும் டிக்கெட் விலை

புறப்பாடுசேரும் இடம்கட்டணம்
அகமதாபாத் மும்பை ₹ 1,218
புனே பெங்களூரு ₹ 1,383
ஹைதெராபாத் பெங்களூரு ₹ 1,417
பெங்களூரு ஹைதெராபாத் ₹ 1,429
சென்னை மும்பை ₹ 1,856
தில்லி ஸ்ரீநகர் ₹ 1,970
தில்லி மும்பை ₹ 2,114
ஸ்ரீநகர் தில்லி ₹ 2,150
தில்லி பாட்னா ₹ 2,238
தில்லி லே ₹ 2,265
தில்லி கொல்கத்தா ₹ 2,274
புனே தில்லி ₹ 2,302
ஹைதெராபாத் கொல்கத்தா ₹ 2,427
தில்லி பெங்களூரு ₹ 2,525
புனே நாக்பூர் ₹ 2,532
பாக்தோகிறா தில்லி ₹ 2,708
ஸ்ரீநகர் மும்பை ₹ 3,005
தில்லி பாக்தோகிறா ₹ 3,609
குவஹாத்தி தில்லி ₹ 3,630
சென்னை போர்ட் பிளேர் ₹ 5,378

பிற விதிமுறைகள்

பிற விதிமுறைகள்

1. கோஏர் நிறுவனத்தின் நிலையான டிக்கெட் ரத்து விதிகள் மற்றும் மீண்டும் புக் செய்யும் விதிகள் இந்த விற்பனைக்குப் பொருந்தும்.
2. குறைந்த டிக்கெட்கள் மட்டுமே இந்தச் சலுகை விலையில் கிடைக்கும்.
3. குழுவாக டிக்கெட் புக் செய்யும் போது இந்தச் சலுகை கிடைக்காது.
4. குழந்தைகளுக்கு ஆஃபர் கிடையாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+