டெஸ்லா காரை வாங்கும் முதல் இந்திய தொழிலதிபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 வருட ஆட்டோமொபைல் சந்தையைப் புரட்டிப்போட்ட ஒரு நிறுவனம் என்றால் டெஸ்லா. இந்நிறுவனம் அதிவேக எலக்ட்ரிக் கார்களைப் பல சிறப்பு அம்சங்களுடன் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சொல்லப்போனால் ஆட்டோமொபைல் துறையில் எதிர்காலமே டெஸ்லா என்றால் மிகையாகாது.

 

இதுவரை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் விற்பனை செய்து வந்த டெஸ்லா, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் தனது விற்பனையைத் துவங்க சீனாவில் புதிய தொழிற்சாலையை அமைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது. இந்தியா இந்த வாய்ப்பைக் கடைசிக்கட்டத்தில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் ஒருவர் முதல் முறையாக டெஸ்லா காரை வாங்கியுள்ளார்.

ஹர்ஷ் கோன்கா

ஹர்ஷ் கோன்கா

ஆர்பிஜி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோன்கா சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் கணக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இதில் ஒரு கண்டெய்னர் உள்ளே புதிய டெஸ்லா காரின் புகைப்படமும், இதன் வெளியில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் என்ற பெயர் பலகையும் இருந்தது.

டீவிட்

புகைப்படத்துடன் பதிவிட்ட ஹர்ஷ் கோன்கா, டாப் பிஸ்னெஸ்மேன் ஒருவர் இந்தியாவின் முதல் டெஸ்லா காரை இறக்குமதி செய்துள்ளார். இது என்னுடைய கனவு கார், கண்டிப்பாக இந்தக் காரை ஒட்ட ஒரு வாய்ப்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

யாருடையது..?
 

யாருடையது..?

இந்தக் கார் யாருடையது என்ற கேள்வி கடந்த 4 நாட்களாகச் சமுக வலைதளத்தங்களில் வலம் வந்த நிலையில் இதன் உண்மையான உரிமையாளர் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

 எஸ்ஸார் குரூப்

எஸ்ஸார் குரூப்

இந்தியாவில் பல்வேறு துறையில் வர்த்தகம் செய்யும் எஸ்ஸார் குரூப்-இன் தலைவர் சஷி ரூயா என்பது ஹர்ஷ் கோன்கா மூலமாகவே தற்போது தெரியவந்துள்ளது.

ஹர்ஷ் கோன்கா வெளியிட்ட டிவீட்டின் கீழ் இந்தக் காரின் உரிமையாளர் என ஒருவர் சஷி ரூயா பெயரை பதிவிட்டார், அதற்கு ஹர்ஷ் கோன்கா-வும் ஆம் எனப் பதில் அளித்துள்ளார்.

சீனாவிற்கு ஜாக்பாட்..!

சீனாவிற்கு ஜாக்பாட்..!

டெஸ்லாவை இழந்தது இந்தியா.. சீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's first Tesla car imported by Top businessman

India's first Tesla car imported by Top businessman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X