எண்ணெய் நிறுவனத்தில் இருந்து 1.9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து டெலிகாம் துறையில் கால் ஊன்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்ததாக டெலிகாம் பிரிவை தனியாகப் பிரித்து ஜியோ பங்குகளை மட்டும் ஐபிஓ-ல் வெளியிட முடிவு செய்துள்ளது.
எனவே ஜியோ நிறுவனம் 2018 இறுதிக்குள் அல்லது 2019 துவக்கத்தில் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பங்குகளை ஐபிஓ-ல் வெளியிடுவது குறித்துத் தீவிரமாக விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய சந்தை நேர முடிபில் 0.09 சதவீதம் என 0.85 புள்ளிகள் சரிந்து ரூ.915.05 ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டது.
ஜியோ இன்ஃபோகாம் வருவாய்
செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பெற்ற 6,147 கோடி ரூபாய் வருவாயில் 270.59 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தது. ஆனாலும் தனது டெலிகாம் பிரிவு வட்டி மற்றும் வரி போன்றவற்றில் வருவாய் என்பது நேர்மறையாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வணிக ரீதியாகத் தனது டெலிகாம் சேவையினை 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதல் துவங்கியது. ஜியோவின் போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் அடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் முறையே 1.46 மற்றும் 2.40 சதவீதம் சரிந்து 524.75 ரூபாய் மற்றும் 93.45 ரூபாய் ஒரு பங்கு என இன்று வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
சேவைத் துவங்கிய 170 நாட்களில் இலவசங்களை வாரி வழங்கி 100 மில்லியன் சந்தாதார்களைப் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் தற்போது 132,679,328 சந்தாதார்கள் உள்ளனர்.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் மொத்தமாக 285,195,633 வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும், அக்டோபர் 2017-ல் மட்டும் 3,148,164 வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடாபோன்
வோடாபோன் நிறுவனத்தில் 208,323,427 பயனர்கள் உள்ளதாகவும், அக்டோபர் 2017-ல் 8,79,413 வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஐடியா
ஐடியா நிறுவனத்தில் 190,868,572 வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் அதில் 713,408 வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாதத்தில் புதிதாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏர்செல்
ஏர்செல் நிறுவனத்தில் 88,254,714 வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாமதம் வரை உள்ளனர் என்றும், அந்த மாத்தில் மட்டும் 4,97,264 வாடிக்கையாளர்கள் சேவையினை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications