2017-ம் ஆண்டுக் கூகுள் தேடல் இணையதளத்தில் இந்தியாவில் இருந்து எதை எல்லாம் அதிகம் தேடியுள்ளார்கள் என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில் இருந்து நாம் வணிகம் துறையில் எதுவெல்லாம் அதிகளவில் தேடப்பட்டுள்ளது என்ற பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
ஜிஎஸ்டி
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி ஜூன் 30ம் தேதி நள்ளிரவு துவங்கி, ஜூலை 1ம் தேதி சரியாக 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து அதிகளவில் கூகுளில் தேடியுள்ளார்களாம். அதிலும், ஜிஎஸ்டி என்றால் என்ன? ஜிஎஸ்டி தாக்கல் செய்வது எப்படி? என்று அதிக நபர்கள் தேடியுள்ளனர்.
பிட்காயின்
உலகளவில் பிட்காயினின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில் ‘பிட்காயின்' என்றால் என்ன? இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி? என்றும் அதிகளவில் தேடியுள்ளனர்.
பிஎஸ்3 வாகனங்கள்
அதிகப் புகை வெளியிடும் பிஎஸ்3 வாகனங்கள் 2017 ஏப்ரல் 1 முதல் தடை செய்யப்பட்டது குறித்து அதிகளவில் தேடியுள்ளனர்.
ஜியோ
4ஜி ஜியோ போன் இலவசம் என்றும் செக்யூரிட்டி டெபாசிட்டாக 1,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 3 வருடத்தில் திரும்பப் பெறலாம் என்று அறிவித்ததை அடுத்து, ஜியோ போன் புக் செய்வது எப்படி என்றும் அதிகம் தேடியுள்ளனர்.
ஆதார் - பான் இணைப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் தான் வருமான வரி தாக்கல் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பலரும் தேடியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு
ஜனவரி மாதம் தமிழகத்தில் மிகப் பெரிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புரட்சி எழுந்த போது ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என்று அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர்.
உலக அழகி
2017-ம் ஆண்டு உலகி அழகி பட்டத்தினை வெற்ற மானுஷி சில்லார் குறித்தும் அதிகளவில் கூகுள் இணையதளத்தில் தேடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications