தமிழ்நாட்டில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை வென்றது பெல்..!
தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் உடன்குடியில் 2X600 மெகாவாட் சக்தி கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்கும் 7,300 கோடி ரூபாய் ஆர்டர் பெல் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
கடந்த 3 வருடத்தில் தமிழ்நாட்டு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்த 4 அதிநவீன மின் உற்பத்தி தளத்தை அமைக்கும் திட்டங்கள் அனைத்தும் பெல் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் 2X600 மெகாவாட் சக்தி கொண்ட மின் உற்பத்தி தளத்தை எண்ணூர், வட சென்னை, உப்பூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான ஏலம் உலகளவில் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி பகுதியில் அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications