மத்திய அரசு வியாழக்கிழமை ஆதார் - மொபைல் எண் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையினை ஏற்றுப் பிப்ரவரி 6 ஆக இருந்த காலக்கெடுவினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
எனவே தற்போது மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடுவை 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதார் - பான் இணைப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை சென்ற வாரம் தான் மத்திய அரசு டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து நீட்டித்து 2018 மார்ச் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆதார் - பான் இணைப்பைச் செய்தால் தான் வருமான வரி தாக்கல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் - வங்கி கணக்கு
இரண்டு நாட்களுக்கு முன்னர்ப் புதன்கிழமை தான் மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதியை டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து நீட்டித்து 2018 மார்ச் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது.
ஆதார் - மொபைல் எண்
மேலும் தற்போது மத்திய அரசு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையினை ஏற்றுப் பிப்ரவரி 6 ஆக இருந்த மொபைல் எண் - ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவினை 2018 மார்ச் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
அரசு நலத் திட்டங்கள்
அரசு பொது நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி இன்னும் 2017 டிசம்பர் 31 ஆகவே உள்ளது. இதனை மத்திய அரசு நீட்டித்து அறிவிக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டு
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடு 2018 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மியூச்சுவல் ஃபண்டு, பங்குச் சந்தை கணக்குகளுக்குக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications