சுங்க வரி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு..!
மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 10 சதவீதமாக இருந்த சுங்க வரியினை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
சுங்க வரி உயர்வால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை குறைவாக இருக்கும் என்றும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் படி இருக்கும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார்.
விலை ஏறும் பொருட்கள்
மொபைல் போன் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற பொருட்கள் மீதும் 20 சதவீதம் வரை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்த போது சுங்க வரி மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்க வரி
இதுகுறித்த அறிவிப்பினை வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய அரசு இந்தச் சுங்க வரி உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications