வால்ட் டிஸ்னி நிறுவனம் வியாழக்கிழமை 52.4 பில்லியன் டாலர் அளித்து 21-வது ஃபாக்ஸ் செஞ்சிரி நிறுவனத்தின் பல்வேறு சொத்துக்களை வாங்க இருப்பதாக அறிவித்தது.
டிஸ்னி நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் 21-வது ஃபாக்ஸ் செஞ்சிரி நிறுவனத்திடம் உள்ள ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மற்றும் பிற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பங்குகள் டிஸ்னி வசம் செல்ல உள்ளது. அதே நேரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பும் பறிபோக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இவை குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
டிஸ்னி - ஸ்டார்
டிஸ்னி நிறுவனத்தின் 52.4 பில்லியன் டாலர் டீல் அறிவிப்பினை அடுத்து ஸ்டார் இந்தியா நெட்வொர்க் வசம் 9 மொழிகளில் உள்ள 69 டிவி சேனல்கள் மற்றும் ஹாட்ஸ்டார் இணையதள ஸ்ட்ரீமிங் சேவை போன்றவற்றில் இனி டிஸ்னியால் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு முடியும். அது மட்டும் இல்லாமல் டிஸ்னி வசம் சர்வதேச கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான உரிமமும் உள்ளது.
நெட்பிளிக்ஸ் - அமேசான்
ஏறகன்வே நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இந்திஅயவில் இணையதளம் மூலம் தங்களது ஸ்ட்ரீமிங் சேவையினை வழங்கி வரும் நிலையில் தற்போது டிஸ்னியின் இந்தச் சர்வதேச அளவிளான சேவை விரிவு படுத்தும் செயலானது மிகப் பெரிய போட்டியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
டிஸ்னி
டிஸ்னி நிறுவனம் சர்வதேச அளவில் தங்களது வணிகத்தினை விரிவு படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, இந்த நெட்வொரிக்கின் ஈஎஸ்பின் தொலைக்காட்சி நிறுவனம் டிஜிட்டல் சேவைகளின் போட்டியால் தங்களது சந்தையினைப் பெறும் அளவில் இழந்து வருகிறது.
இந்திய தொலைக்காட்சி சந்தை
ஆசிய அளவில் இந்தியாவின் தொலைக்காட்சி சந்தை 154 மில்லியன் வீடுகளுடன் 2016-ம் ஆண்டு வரை இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் இதுவே 2021-ம் ஆண்டுக்குள் 167 மில்லியனாக உயரும் என்றும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
மொபைல் மற்றும் இணையதளம் மூலன் செய்யப்படும் ஒளிபரப்புகளின் வளர்ச்சி 2016-2021 இடைப்பட்ட காலத்தில் 68 சதவீத வளர்ச்சியினைப் பெறும் என்று கூறப்படுகிறது.
ஸ்டார் நெட்வொர்க்
இந்தியாவில் ஸ்டார் நெட்வொர்க் மிக வேகமான வளர்ந்து வரும் ஒரு நெட்வொர்க்காக உள்ளது. ஜி நிறுவனம் இவர்களுக்குப் போட்டியாக இருந்தாலும் அது பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
வணிகம் மற்றும் வருவாய்
டிஸ்னி நிறுவனத்தின் நுழைவால் ஸ்டார் டிவி நிறுவனம் புதிய விளம்பரங்கள் மூலமாகத் தங்களது வணிகத்தின் வருவாயினைப் பெருக்கும். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்திற்கு ஹாட்ஸ்டார் சேவை மூலமாக 10 சதவீதம் வருவாய்க் கிடைக்கிறது. தற்போது அது மேலும் 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
உலகின் இரண்டாம் மிகப் பெரிய மக்கள் தொகையுடன் உள்ள இந்தியாவில் டிஸ்னிக்கு ஸ்டார் நிறுவனத்தின் மூலம் மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு ஹாட்ஸ்டார் மூலம் மிகப் பெரிய நெற்றுக்கடியினை டிஸ்னி அளிக்கும்.
பார்வையாளர்கள்
ஏற்கனவே இந்தியாவில் டிஸ்னி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் ஸ்டார் சேனல்களும் சேர்ந்தால் மாதத்திற்கு 720 மில்லியன் பார்வையாளர்களைப் பெறும். மேலும் டிஸ்னி தங்களது திரைப்படங்களை ஸ்டார் சேனல்களில் ஒளிபரப்பு செய்யும்.
விளையாட்டு
செப்டம்பர் மாதம் இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-ன் உரிமத்தினை ஸ்டார் நிறுவனம் 2.55 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. எனவே இந்தியாவின் இரண்டு முக்கியப் பொழுதுபோக்கான பாலிவுட் மற்றும் கிரிக்கெட் இரண்டும் டிஸ்னியிடம் சிக்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தினை ஃபாக்ஸ் பெற்று இருந்தது.
திரைப்படங்கள்
ஃபாக்ஸ் நிறுவனம் யூடிவி உடன் இணைந்து பாலிவுட் படங்களைத் தயாரித்து அதிக நட்டம் அடைந்ததால் ஆங்கிலப் படங்களை வெளியிடுவது போன்றவற்றை மட்டும் தற்போது செய்து வருகிறது. தற்போது டிஸ்னியின் வருகையால் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஊழியர்கள்
டிஸ்னி - ஃபாக்ஸ் நிறுவனத்தின் இணைவு மிகப் பெரிய பொழுதுபோக்குச் சேவையினை அளிக்கும் அதே நேரத்தில் 10,000 ஊழியர்களின் வேலை பறிபோகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications