ரூ.20,000 முதலீட்டில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ஏர்டெல் உருவானது எப்படி?

டெல்லி: இன்றைய தேதியில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் எது என்றால் அது ஏர்டெல் தான். ஆனால் ஜியோ வருகைக்குப் பிறகு சிறிய சருக்கல் இருந்தாலும் ஏர்டெல் போன்று சேவை அளிக்க மற்றும் வாடிக்கையாளர்களைக் கவர ஜியோ நீண்ட காலம் போராட வெண்டி இருக்கும்.

ஆனால் ஏர்டெல் நிறுவனம் வெறும் 20,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு இன்று கோடிகளில் வருவாயினை ஈட்டி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

முதல் தலைமுறை பிஸ்னஸ் மேன்

முதல் தலைமுறை பிஸ்னஸ் மேன்

அரசியலில் இருந்த இவரது தந்தையிடம் 20,000 ரூபாயினைக் கடனாகப் பெற்று 1976-ம் ஆண்டு 18 வயதில் சைக்கிள் கிரான்க் ஷாப்ட் தயாரிக்கும் தொழிற்சாலையினைச் சுனில் மிட்டல் துவங்கினார். பின்னர் 1980-ம் ஆண்டுத் தனது சகோதரர்கள் ராகேஷ் மற்றும் ராஜன் உடன் இணைந்து பார்தி ஓவர்சீஸ் டிரேட்ங் எனப்படும் இறக்குமதி நிறுவனத்தினைத் துவங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் சிக்கில் உதிரிப்பாகங்களை விற்பனை செய்து வந்த சுனில் மிட்டல் பின்னர் மும்பையில் உள்ள யார்ன் தொழிற்சாலைக்கும் மாறினார்.

எலெக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர்கள்

எலெக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர்கள்

பின்பு தனது சைக்கிள் உதிரிபாகங்கள் தொழிற்சாலையினை விற்று விட்டு ஜப்பானின் சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர்கள் டீலராக மாறினார். வருவாய் அதிகரித்த அதே நேரத்தில் இந்திய அரசு ஜெனரேட்டர்கள் இறக்குமதியைத் தடை செய்ய மிகப் பெரிய நட்டம் அடைந்தார்.

 புஷ் பாட்டன் போன்கள்

புஷ் பாட்டன் போன்கள்

நட்டம் அடைந்த சுனில் மிட்டல் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது வெளிநாடு சென்று வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்ற ஆராய்ந்த போது இவரது கண்களில் புஷ் பாட்டன் போன்கள் கண்களில் பட்டன. அதுவரை இந்தியாவில் ரோட்டரி போன்களைப் பயன்படுத்து வந்த நிலையில் தனக்கு முன் அனுபவம் ஏதும் இல்லாத டெலிகாம் துறையில் நுழைந்ர். பீடெல் பிராண்டு பெயரில் பட்டன் போன்கள் மற்றும் ஃபேக்ஸ் சாதனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் துவங்க வியாபாரம் சூடு பிடித்தது. இதுவே 1984-ம் ஆண்டுச் சொந்தமாகப் புஷ் பட்டன் போன்களை அசம்பிள் செய்யும் தொழிற்சாலையினை நிறுவினார்.

டெலிகாம் சேவை வழங்குநர்

டெலிகாம் சேவை வழங்குநர்

1992-ம் ஆண்டு இந்திய அரசு நான்கு மொபைல் நெட்வொர்க் சேவைகளுக்கு உரிமம் வழங்கியது. இதனைப் பெற்று மொபைல் சேவை அளிக்கத் துவங்கலாம் என்று சுனில் மிட்டல் முடிவு செய்த போது டெல்லி செல்லுலார் என்ற நிறுவனம் இந்தத் துறையில் முன் அனுபவத்துடன் டெலிகாம் சேவையினை அளிக்க உரிமத்தினைப் பெற்றது.

 ஏர்டெல்

ஏர்டெல்

சுனில் மிட்டல் இதனால் துவண்டு போகாமல் பிரெஞ்ச் டெலிகாம் நிறுவனமான விவேந்தியுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு 1994-ம் ஆண்டு டெல்லியில் பார்தி செல்லுலார் லிமிடட் நிறுவனத்தின் கீழ் ஏர்டெல் செல்லுலார் சேவைக்கான உரிமத்தினை மத்திய அரசிடம் இருந்து பெற்று ஒரே வருடத்தில் தனது வணிகச் சேவையினைத் துவங்கினார்.

பணம் சம்பாதிக்கும் வியாபாரம்

பணம் சம்பாதிக்கும் வியாபாரம்

பார்தி ஏர்டெல் சேவை துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை 2 மில்லியன் வாடிக்கையாளர்களிடம் ஏர்டெல் பெற்றது. டெல்லியில் எஸ்டிடி மற்றும் ஐஸ்டி கட்டணங்களைக் குறைத்தார். 24 மணி நேரமும் கடுமையாக உழைத்துப் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்.

ஆப்ரிக்கா

ஆப்ரிக்கா

2010-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஏர்டெல் நிறுவனத்தின் டெலிகான் சேவையினை ஆப்ரிக்காவில் துவங்கினாலும் அவசரப்பட்டுவிட்டோமே என்று இவரை யோசிக்க வைத்தது. ஆனால் விடா முயற்சியுடன் 5 வருட போராட்டத்திற்குப் பிறகு ஏர்டெல் நிறுவனத்திற்கு லாபம் அளிக்கக் கூடிய ஒரு நாடாக ஏர்டெல் நிறுவனமும் உள்ளது.

ரீடெய்ல்

ரீடெய்ல்

2012-ம் ஆண்டுப் பார்தி ஏர்டெல் நிறுவனம் அமெரிக்காவின் வால் மார்ட் ரீடெல் நிறுவனத்துடன் இனைந்து இந்தியா முழுவதும் ரீடெய்ல் வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறது.

பார்தி ஃபவுண்டேஷன்

பார்தி ஃபவுண்டேஷன்

ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ நாடு முழுவதும் 250 பள்ளிகள் அமைத்து பார்தி ஃபவுண்டேஷன் என்ற பெயரில் கல்வி அளித்து வருகின்றார்.

 விருதுகள்

விருதுகள்

1) பத்ம பூஷன், இந்திய அரசு, 2007
2) ஆசியாவின் சிறந்த டெலிகாம் தலைமை நிர்வாக அதிகாரி, டெலிகாம் ஆசியா விருதுகள், 2005
3) இன்சீடு வணிகத் தலைவர் விருது, 2011
4) சிறந்த சிஈஓ, இந்தியா, நிறுவன முதலீட்டாளர், 2005
5) ஆசிய வணிகர்ன் ஆஃப் தி இயர், பார்ச்சூன் இதழ், 2006

சக்சஸ் மந்திரம்

சக்சஸ் மந்திரம்

தான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதனைத் திறன் படச் செய்யும் வரை ஓடிக்கொண்டு இருப்பதே தானது சக்சஸ் மந்திரம் என்று சுனில் மிட்டல் கூறியுள்ளார். ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன், ஜெர்மனியின் சீமென்ஸ், பின்லாந்து நோக்கியா மற்றும் மிக முக்கியமாக அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

5,000 ரூபாய் கடன்

5,000 ரூபாய் கடன்

ஒரு முறை சுனில் மிட்டலுக்கு 5,000 ரூபாய்த் தேவைப்பட்ட போது இவரது உறவினர் பிரிஜ்மோகன் லால் முஞ்சாலிடம் கேட்டதற்கு இவரது ரசீகள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டு 5,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்த லால் இதனையே பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். அதனைத் தனக்கான ஊக்கமாக எடுத்துக்கொண்ட சுனில் மிட்டல் உலகம் முழுவதும் இன்று தனது வணிகத்தினைச் செய்து வருகிறார்.

 பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று கோடிகளில் லாபம் ஈட்டுவது மட்டும் இல்லாமல் இந்தியா மட்டும் இல்லாமல் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி டெலிகாம் சேவை மட்டும் இல்லாமல் லேன்டு லைன், பிராட்பேண்டு மற்றும் விஓஐபி சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக 285,195,633 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாகச் சேவையினை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+