மத்திய நிதியமைச்சகம் ஸ்மார்ட்போன், டிவி, பிரோஜெக்டர் என 12க்கும் அதிகமான பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிகளவிலான வர்த்தக வாய்ப்பை உருவாக்க முடியும் என நம்புகிறது.
ஆப்பிள்
இந்தியாவில் அதிகளவில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
மேக் இன் இந்தியா
இந்த வரி உயர்வின் மூலம் மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை நிறுவனங்கள் பயன்படுத்த ஒரு ஊக்குவிப்பாக அமையும்.
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திட்டங்கள் பெருமளவில் எழுத்து வடிவத்திலேயே உள்ளது. இத்தகைய நெருக்கடியின் வாயிலாக இத்திட்டம் உயிர்பெறும்.
வருவாய் துறை
நிதியமைச்சகத்தின் அறிவிப்பின் படி, வருவாய் துறை வெளியிட்ட அறிக்கையில் இதுவரையில் மொபைல் போன்களுக்குச் சுங்க வரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது இதற்கு 15 சதவீதம் சுங்க வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிவி
அதேபோல் டிவிகளுக்கு 10 சதவீத சுங்க வரி இருந்த நிலையில், தற்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரட்டிப்பு
மானிடர் மற்றும் ப்ரோஜெக்டர்களுக்கு 20 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பழைய வரி விதிப்பை விடவும் இரட்டிப்பு அதிகமாகும்.
இதேபோல் வாட்டர் ஹீட்டர், ஹேர் டிரெசஸ் ஆகியவற்றுக்கும் 20 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகப் பாதிப்பு
இப்புதிய வரி உயர்வின் மூலம் ஆப்பிள் அதிகளவில் பாதிக்கும், இந்தியாவில் விற்பனையாகும் 88 சதவீத பொருட்கள் 88 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications