ஆஸ்திரேலியா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டவ்நெர் ஈடிஐ லிமிடெட் நிறுவனத்தின் கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்தவும், இயக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற கெளதம் ஆதானி தலைமையிலான அதானி நிறுவனம் முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது இம்முயற்சியைக் கைவிட்டுள்ளது.
கடன் பெற தவறியது..
இத்திட்டத்திற்காக அதானி குழுமம் குறைந்த வட்டியில் 16.5 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர் அளவிலான அரசு கடன் பெறத் திட்டமிட்டது, ஆனால் இந்த முயற்சியில் தோல்வியைச் சந்தித்த காரணத்தால் அதானி குழுமம் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.
பிற நிதி அமைப்புகள்
ஆதானி நிறுனத்திற்குக் கடன் வழங்க ஆஸ்திரேலியா அரசு மறுப்புத் தெரிவித்தாலும் கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கத்திற்குக் கடன் வழங்க இந்நாட்டின் பல தனியார் வங்கிகளும், வெளிநாட்டு வங்கிகளும் தயாராக உள்ளது. மேலும் இத்திட்டத்திற்குக் கடன் வழங்க 3 சீன வங்கியும் ஆர்வம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு
திங்கட்கிழமை அதானி மற்றும் டவ்நெர் நிறுவனங்கள், இத்திட்டத்திற்கான அனைத்து ஒப்புதல் கடிதங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சேவை குறித்த ஒப்பந்தங்கள் என அனைத்தையும் ரத்துச் செய்வதாக அறிவித்து, அதானி இத்திட்டத்தின் முயற்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
ரயில் பாதை
கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கடல் பகுதி வரையில் ரயில் பாதை அமைத்து நிலக்கரி ஏற்றுமதி செய்யும் திட்டத்திற்கு ஆதானி நிறுவனத்தின் முயற்சியின் வாயிலாக NAIF அமைப்பிடம் 900 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடனை பெற்ற நிலையில் குயின்ஸ்லேன்டு மாநிலத்தின் பிரீமியர் Annastacia Palaszczuk இக்கடனை ரத்துச் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார்.
அதானி ஆஸ்திரேலியா
அதானி குழுமத்தின் மலிவான விலையில் நிலக்கரி உற்பத்தி செய்து, விநியோகம் செய்யும் திட்டத்தில் கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கம் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தற்போது நிதியுதவிகள் தடைபெற்ற நிலையில், இதே திட்டத்தை owner operator முறையில் இயக்க ஆர்வமாக உள்ளோம் என அதானி ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடுமையான எதிர்ப்புகள்
இத்திடத்திற்கு ஆரம்பம் முதலே பல்வேறு தடைகள் உருவானது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கிரேட் பேரியர் ரீப்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என வழக்குத் தொடுத்தனர். இதன் காரணமாக வழக்கு விசாரணையின் மூலம் பல வருடருங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்த தாமதமானது.
2014இல்..
அதானி நிறுவனத்திற்கு டவ்நெர் 2014ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான முதற்கட்ட ஒப்புதலுக்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலர். இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், கட்டமைப்புகளை உறுதிப்படுத்தவும் 7 வருடங்கள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டது.


Click it and Unblock the Notifications