விமானப் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் நீண்ட நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யப்படும். அதே நேரம் நீங்கள் டிக்கெட் புக் செய்த பிறகு பயணத்தில் மாற்றம் இருந்தால் டிக்கெட் ரத்துச் செய்ய 3,000 ரூபாய்க்கும் அதிகமாக டிக்கெட் ரத்துக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் பயணிகள் இருந்தனர்.
அதனைக் குறைக்க வேண்டும் சில மாதங்களுக்கு முன்பு விமானப் போக்குவரத்துத் துறை விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது மட்டும் இல்லாமல் தற்போது புதிய விதியினை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.
புதிய விதி
விமானப் போக்குவரத்துத் துறை கொண்டு வந்துள்ள புதிய விதிகளின் மூலம் டிக்கெட் ரத்து கட்டணமானது அடிப்படக் கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்திற்கும் கூடுதலாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளாட் 3,000 ரூபாய்
விமான டிக்கெட் ரத்து செய்யும் போது பிளாட்டாக அதிகபட்சம் 3,000 ரூபாய் வரை தான் டிக்கெட் ரத்துக் கட்டணம் இருக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சென்ஹா தெரிவித்தார். மேலும் இந்தக் கட்டணமும் விரைவில் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சலுகை விலை டிக்கெட்
சலுகை விலையில் விமான டிக்கெட் வங்கும் போது இந்த 3000 ரூபாய் என்பது மிக அதிகமாக இருக்கும் என்பதால் அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்தினை மட்டும் பெற வேண்டும் என்று உதிரவிடப்பட்டுள்ளது.
யாருக்கு பயன் கிடைக்கும்?
புதிய வித்திகளால் முன்கூடியே திட்டமிட்டு நீண்ட நாட்களுக்கு முன்பு குறைந்த விலையில் விமான டிக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகப் பயன் அடைவார்கள். பயணத் தேதியில் செல்ல முடியாத போது அதிக டிக்கெட் ரத்துக் கட்டணத்தில் இருந்து விடுதலைப்பெறுவார்கள்.
புகார்
கடந்த சில ஆண்டுகளாக விமான டிக்கெட் ரத்துக் கட்டணம் இரட்டிப்பாகியுள்ளது என்று பயணிகள் புகார் அளித்தை அடுத்து விமானப் போக்குவரத்துத் துறை இந்த முடிவுகளை எடுத்துள்ளது.
மேலும் பல விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆஃபர் விலையில் டிக்கெட் வாங்கும் போது ரத்து செய்தால் ஒரு ரூபாய் கூடத் திருப்பி அளிப்பதில்லை.
இணையதள டிக்கெட்
இணையதளம் மூலம் விமான டிக்கெட் புக் செய்தவர்கள் ரத்து செய்தால் கூடுதலாக ரத்துச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானப் பயணிகள் குறைந்த அளவு மட்டுமே ரத்துக் கட்டணத்தினைப் பெற முடியும், சில நேரங்களில் அதுவும் கிடைக்காது.
பயணிகள் உரிமை மசோதா
மத்திய அரசும் விமானப் பயணத்தினை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பயணிகள் உரிமை மசோதா என்பதை உருவாக்கி வருகிறது.
ரயில் டிக்கெட்
அன்மை காலமாக ரயில் டிக்கெட் புக் செய்பவர்களும் டிக்கெட்டினை ரத்து செய்யும் போது குறைந்த அளவில் டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்தும் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications