2017ஆம் ஆண்டுக்கான வளாக நேர்முகத் தேர்வுகள் நாட்டின் அனைத்து ஐஐடி கல்லூரிகளிலும் நடந்து வருகிறது. எப்போதும் போலவே இந்த வருடமும் இந்திய மற்றும் வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அள்ளி வீசியுள்ளது.
மொத்தம் 5 நாட்கள் நடந்த வளாக நேர்முகத் தேர்வில், முதல் நாளிலேயே அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் என்ன திருப்பம் என்றால்...
வேலைவாய்ப்பு எண்ணிக்கை
ஒவ்வொரு வருடமும் ஐஐடி பாம்பே கல்லூரி தான் அதிகளவிலான வேலைவாய்ப்புகளைப் பெறும் ஆனால் இந்த முறை, ஐஐடி மெட்ராஸ் கல்லூரி மாணவர்கள் அதிகளவிலான வேலைவாய்ப்பைப் பெற்று வரலாற்றை மாற்றியுள்ளனர்.
முக்கியத்துவம்
இதன் மூலம் இனி வரும் காலத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஐஐடி பாம்பே கல்லூரிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என ஐஐடி மெட்ராஸ் கல்லூரியின் பிளேஸ்மென்ட் ஆலோசகர் மனு சந்தானம் தெரிவித்தார்.
20-50% அதிக வேலைவாய்ப்புகள்
2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், முதல் நாள் வளாகத் தேர்வில் இந்த வருடம் கிட்டத்தட்ட 20-50 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகள் ஐஐடி மெட்ராஸ் கல்லூரி மாணவபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாள்
ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் 2017ஆம் ஆண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1100, முதல் வளாகத் தேர்வில் 195 பேருக்கு இந்தியாவிலும், 11 பேருக்கு வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட்டது,
அதுவே ஐஐடி பாம்பேவில் 175பேருக்கு இந்தியாவிலும், 22 பேருக்கு வெளிநாட்டிலும் வழங்கப்பட்டது.
5வது நாள் முடிவில்
ஐஐடி மெட்ராஸ் 720 வேலைவாய்ப்புகள் இந்தியாவிலும், 22 வேலைவாய்ப்புகள் வெளிநாட்டிலும் 5வது நாள் முடிவில் பெற்றுள்ளனர்.
ஐஐடி பாம்மேவில் இதன் எண்ணிக்கை 673 வேலைவாய்ப்புகள் இந்தியாவிலும், 60 வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ்
இந்தியாவில் அனைத்து ஐஐடி கல்லூரிகளையும் ஒப்பிடுகையில் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் தான் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐஐடி வேலைவாய்ப்பு வரலாற்றில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications