பிரதமர் மோடி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த பின்பு, நாடு முழுவதும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கிடைத்த பணம் மற்றும் சொத்துக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றம்
இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் முதல் 2017 மார்ச் வரையிலான காலத்திற்குச் செய்யப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய மாநில நிதியமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
அதிரடி சோதனை
2016 நவம்பர் முதல் 2017 மார்ச் வரையிலான காலத்தில் சுமார் 900 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.
கருப்புப் பணம்
இந்தச் சோதனையின் வாயிலாக 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் கணக்கில் காட்டப்படாத 7,961 கோடி ரூபாய் அளவிலான கருப்புப் பணம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டுகள்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு சுமார் 18.70 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதன் அளவு 15.70 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 8
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications