வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஒரு பிரிவினர் 2012-க்கு பிறகு ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவில்லை என்று 2017 டிசம்பர் 27-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தினால் சேவை தடை வாய்ப்பு உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி போன்றவை வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
நோட்டிஸ்
இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அனைத்து வங்கிகளுக்கும் டிசம்பர் 27 வேலை நிறுத்தம் குறித்து நோட்டீஸ் மூலமாகத் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்குச் சம்பள உயர்வைத் தாமதப்படுத்தாமல் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்க இருப்பதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி எச் வேங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
2012-ம் ஆண்டு முதல் ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது என்றும், மூத்த ஊழியர்கள் ஆணையர் இது குறித்த சமரச கூட்டத்திற்கு டிசம்பர் 30-ம் தேதி அழைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலை நிறுத்தம்
நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் வங்கி நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு உறுதி அளிக்கவில்லை என்றால் கண்டிப்பாக 27 டிசம்பர் வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications