பணப் பரிமாற்ற சேவை நிறுவனமான பேடிஎம் இந்தியாவில் உள்ள அனைத்துக் கடைகளிலும் க்யூஆர் முறையிலான பணப் பரிவர்த்தனை சேவையில் பணம் பெற்றுக்கொள்வதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றி, வைப்புச் செய்யப்படும் பணத்தை வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம் எனவும் பேடிஎம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த அடுத்த 12 மாதத்திற்கு விற்பனையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், விழிப்புணர்வு கொடுக்கவும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவிட முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் விற்பனையாளர்களும், நுகர்வோர்களுக்கும் அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகும் எனவும் பேடிஎம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் துவக்கத்தில் இருந்தே டிஜிட்டல் பேமென்டுகள் எளிமையாக்கும், ஊக்குவிக்கும் பணிகளைச் செய்து வருகிறது. பணமதிப்பிழப்பின் போது இந்நிறுவனத்தின் சேவைகள் பெரிய அளவில் உதவியது, ஆனால் அதன் பின் இந்நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
மக்கள் மத்தியில் தனது சேவையைக் கொண்டு சேர்ப்பதற்காகவே தற்போது பேடிஎம் விற்பனை பிரிவில் 10,000க்கும் அதிகமான ஊழியர்களைச் சேர்த்துள்ளது பேடிஎம்.


Click it and Unblock the Notifications