டாடா டெலிசர்வீசஸ், டெலினார் மற்றும் ஜியோ உட்பட மேலும் இரண்டு நிறுவனங்கள் தங்களது வருவாயினைக் குறைத்து கட்டி 14,800 கோடிக்கும் குறைவாகக் கணக்கு காண்பித்து 2,578 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர் என்று சிஏஜி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் என்ற அழைக்கப்படும் சிஏஜி பாராளுமன்றத்தில் இதற்கான அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு உரிமம் கட்டணமாக 1,015.17 கோடி ரூபாயினைக் குறைவாகச் செலுத்தியுள்ளது. 511.53 கோடி ரூபாயினை ஸ்பெக்டர்ம் பயன்பாட்டுக் கட்டணத்திலும், தாமதமாகக் கட்டணம் செலுத்திய விதத்தில் 1,052.13 கோடி ரூபாயினையும் பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5 நிறுவனங்கள்
டாடா டெலிசர்வீசஸ், டெலினார், வீடியோகான் டெலிகாம், குவாட்ரண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சிஏஜி அளித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நிறுவனம் வாரியாக அளிக்கவேண்டிய தொகை
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திடம் இருந்து மட்டும் 1,893.6 கோடி ரூபாய் குறைவாகவும், டெலினார் நிறுவனத்தில் இருந்து 603.75 கோடியும், வீடியோகான் நிறுவனத்தில் இருந்து 48.08 கோடியும், குவாட்ரண்ட் நிறுவனத்திடம் இருந்து 26.62 கோடியும், ஜியோ நிறுவனத்திடம் இருந்து 6.78 கோடி ரூபாயும் உரிம கட்டணம், ஸ்பெக்டர்ம் கட்டணம் மற்றும் தாமதமாகச் செலுத்தப்பட்ட கடன்களுக்கு வட்டி போன்றவற்றை மத்திய அரசு பெறவில்லை.
அரசுக்கு நட்டம்
2014-2015 நிதி ஆண்டில் ஐந்து தனியார் நிறுவனங்களின் கணக்குகளை ஆடிட் செய்த போது 14,513.97 கோடி ரூபாய் வருவாய் சரிசெய்யப்பட்டள்ளது என்றும், வருவாய் குறைவாகக் காண்பித்ததில் மத்திய அரசுக்கு 1,526.7 கோடி ரூபாய் கூடுதல் இழப்பு என்றும் சிஏஜி அறிக்கை கூறுகிறது.
வட்டி
குறைவாகச் செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கு 2016 மார்ச் வரையில் மட்டும் 1,052.13 கோடி ரூபாய் வட்டி என்றும் கூறப்படுகிறது.
எப்படி இந்த விவரங்கள் எடுக்கப்பட்டது?
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தினை (2010-2011 முதல் 2014-2015), குவாட்ரண்ட் டெலிவெஞ்சர்ஸ் (2006-2017 முதல் 2014-2015 வரை). வீடியாகான் டெலிகாம் (2009-2010 முதல் 2014-2015 வரை), டெலினார் (2009-2010 முதல் 2014-2015 வரை) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (2012-2013 முதல் 2014-2015 வரை) ஆடிட் விவரங்களை வைத்து சிஏஜி-ன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications