பொதுவாக இந்திய நுகர்வோர் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக இலக்கு என்றே சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வருடமும் பயணிகள் வாகனங்களைத் தயாரிக்கும் புதுப்புது நிறுவனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் 3 நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று, இந்திய கார் விற்பனை சந்தையில் 74 சதவீதத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
வளர்ச்சி
இந்த 3 நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் 2012-13ஆம் நிதியாண்டுகளில் 65.6 சதவீதமாக இருந்த நிலையில், பல புதிய மாடல்கள், வடிவங்களைப் பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தாலும் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் மூலம் 2017-18ஆம் நிதியாண்டில் இந்த 3 நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
15 முன்னணி நிறுவனங்கள்
இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், 15 நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவிலான கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதில் 6 நிறுவனங்கள் மட்டுமே கடந்த 5 வருட காலகட்டத்தில் விற்பனை அளவுகளைத் தொடர்ந்து உயர்த்தியுள்ளது.
3 நிறுவனங்கள்
இந்திய கார் விற்பனை சந்தையில் மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் 74 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது.
மாருதி சுசூகி
5 வருட காலத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவு 27.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 39.5 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் இது 50.2 சதவீதம் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய்
5 வருட காலத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை அளவு 25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 14.4 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹோண்டா
கடந்த 5 வருட காலத்தில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை அளவு 53.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 2.8 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் இது 5.5 சதவீதம் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
6 நிறுவனங்கள்
2012-13 மற்றும் 2016-17 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா, போர்டு, ரெனால்டு மற்றும் நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications