பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஆனால் அவர் சிறந்த முதலீட்டாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம், ஆமிதாப் பச்சன் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டதில் இருந்து பல்வேறு முதலீடுகளைச் செய்தார், இதன் மூலம் பல நிறுவனங்களில் கூட்டணி வைத்தது மட்டும் அல்லாமல் இந்நிறுவன விளம்பரங்களில் நடித்தும் வர்த்தகத்துடன் தனது முதலீட்டின் மதிப்பையும் பலமடங்கு உயர்த்தினார்.
அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன்
அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால், பிக் பி உடன் சேர்ந்து அவரும் முதலீட்டிலும், பிஸ்னஸ் செய்வதிலும் இறங்கினார்.
கிரிப்டோகரன்சி காய்ச்சல்
அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனும் இணைந்து பணியாற்றியதன் மூலம் பல புதிய வர்த்தகத்தில் இவர்கள் முதலீடு செய்தனர். உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மீது காதல் கொண்டுள்ள நிலையில் பச்சன் குடும்பம் மறைமுகமாக இதில் இருந்து பெரிய அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
மே 2015
2015ஆம் ஆண்டுச் சிங்கப்பூரை சேர்ந்த மெரிடியன் டெக் பிடிஈ என்னும் நிறுவனத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் இணைந்து 2,50,000 டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் வெங்கட ஸ்ரீநிவாஸ் மீனவள்ளி.
சிட்டு.காம்
மெரிடியன் டெக் பிடிஈ நிறுவனத்தின் கீழ் இயங்கும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று சிட்டு.காம், இந்நிறுவனத்தை மீனவள்ளி முதலீட்டில் இயங்கும் மற்றொரு நிறுவனமான லாங்பின் கார்ப் கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது.
நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட 2 நாட்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டால் இரு நிறுவனங்களும் இது பெரிய அளவில் உதவியது.
கிளவுட் சேவை
பச்சன்கள் முதலீடு செய்தபோது சிட்டு.காம் கிளவுட் ஸ்டோரேஜ் மற்ரும் ஈ-டிஸ்ட்ரிபியூஷன் ஸ்டார்ட்அப் ஆகதான் இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சேவைகளைக் கிரிப்டோகரன்சியை உருவாக்கும், நிர்வாகம் செய்யும் அடிப்படை தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜி சேவை அளிக்கும் வகையில் மாறியது.
இது போதுமே..
நாஸ்டாக்கில் பட்டியிலிடப்பட்ட லாங்க்பின் நிறுவனம் கைப்பற்றும் சிட்டு.காம் நிறுவனம் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சியில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதனால் அறிவிப்புக்குப் பின் லாங்பின் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2,500 சதவீதம் வரையில் உயர்ந்து.
2,50,00 பங்குகள்
சிட்டு.காம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெரிடியன் டெக் நிறுவனத்தின் பச்சன்கள் முதலீடு செய்திருந்த காரணத்தால் லாங்பின் நிறுவனம் இவர்களுக்கு 2,50,000 லாங்பின் பங்குகளைக் கொடுத்தது.
உயர்வு..
திங்கட்கிழமை முடிவில் லாங்பின் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 70 டாலரைத் தொட்ட நிலையின் பச்சன்களின் பங்குகள் மதிப்பு 17.5 மில்லியன் டாலராக உயர்ந்தது.
இந்திய ரூபாய் மதிப்பில் 114 கோடி ரூபாய்.
வளர்ச்சி
வெறும் 2,50,000 டாலரை முதலீடு செய்து 2.5 வருடத்தில் இவர்களின் முதலீடு 17.5 மில்லியன் டாலரை அடைந்துள்ளது.
இப்போது சொல்லுங்கள் பச்சன்கள் சிறந்த நடிகர்களா அல்லது சிறந்த முதலீட்டாளர்களா..?
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications