அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வல்லரசு நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இணையப் பாதுகாப்பு என்பது சற்று குறைவாகவே உள்ளது, இதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் பேமெண்ட் செக்யூரிட்டி நிறுவனமான சிசா இந்திய வங்கிகளுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிசா
ஹேக்கர்கள் பெயர் தெரியாத ஒரு வங்கி பேமெண்ட் ஸ்விச் சர்வரில் பாதுகாப்பற்ற ஆபத்தான மென்பொருளை உட்செலுத்தியுள்ளனர். இதனால் வங்கி பரிமாற்றங்கள் அல்லது மக்கள் செய்யும் பணப் பரிமாற்றத்தில் தாக்குதல் ஏற்படுத்தலாம் எனப் பேமெண்ட் செக்யூரிட்டி நிறுவனமான சிசா இந்திய வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கியச் செயல்பாடுகள்
இந்திய வங்கியின் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் பேமெண்ட் சர்வர்களை அணுக உரிமை கொண்ட ஊழியர்களின் பாஸ்வோர்டுகளை மாற்றவும், இரட்டை முறை சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
மேமெண்ட் நெட்வொர்க்
இதுகுறித்துச் சிசா நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், பரிவர்த்தனைகள் செய்யப்பட்டும் நெட்வொர்கில் பாதுகாப்பற்ற ஆபத்தான ஸ்கிரிப்ட் நுழைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் வாடிக்கையாளர்களின் கார்டு எண், எக்ஸ்பியரி நாள், சவிவி எண் மற்றும் வாடிக்கையாளரின் இதர விபரங்களைச் சேரிக்கும் திறன் கொண்டது எனக் கூறியுள்ளார்.
பயன்பாடு
இந்திய பேமெண்ட் சர்வர்களில் திருடப்படும் தகவல்களைக் கொண்டு போலி ஏடிஎம் கார்டுகளில் தகவல்களைப் பதிவேற்றம் செய்து பணத்தைத் திருட முடியும்.
கண்டுபிடிப்பு
இத்தகைய ஆபத்தான மென்பொருள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் வாடிக்கையாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்பது தெரியவில்லை எனச் சிசா தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய டெபிட்கார்டு திருட்டு
கடந்த வருடம் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய டெபிட்கார்டு திருட்டு குறித்து ஆய்வு செய்து வரும் பரிமாற்ற தடயவியல் புலன்விசாரணை பிரிவு சிசா நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications