ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம் விழா சலுகையாக இலவசமாகப் பறங்கள் என்று அதிரடி அஃபரை அறிவித்துள்ளது.
ஆம், ஸ்பைஸ் ஜெட் விமான டிக்கெட்களை நீங்கள் புக் செய்தால் அதே விலை உங்களுக்கு ஸ்பைஸ் ஸ்டைல் இ-காமர்ஸ் இணையதளத்தின் கூப்பன் ஒன்று கிடைக்கும். அந்தக் கூப்பனை பயனப்டுத்தி பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
சலுகை காலம்
ஸ்ஐஸ் ஜெட் நிறுவனத்தின் ‘ப்ளை பார் பிரீ' சலுகை மூலமாக 2017 டிசம்பர் 31 வரை spiceJet.com இணையதளத்தில் டிக்கெட் புக் செய்து 2018 மார்ச் 31 வரை பயணம் செய்ய முடியும்.
கூப்பன் எப்படிக் கிடைக்கும்?
spicejet.com இணையதளத்தில் விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டுமே ஸ்பைஸ் ஸ்டைல் கூப்பன் கிடைக்கும்.
வவுச்சர் எப்படி அளிக்கப்படும்?
ஸ்பைஸ்ஜெட் விமான இணையதளத்தில் நீங்கள் புக் செய்த பிறகு உங்களுக்குக் கிடைக்கும் உறுதி மின்னஞ்சலில் பிஎன்ஆர் விவரங்கள் உடன் வவுச்சர் குறியீடும், டிக்கெட் விலைக்கு இணையாகக் கிடைக்கும்.
ஸ்பைஸ் ஸ்டைல்
பின்னர் ஸ்பைஸ் ஸ்டைல் இணையதளத்தில் 2018 மார்ச் 31 வரை இந்த வவுச்சர் உங்களுக்குச் செல்லுபடியாகும்.
எவ்வளவு சலுகை கிடைக்கும்?
ஸ்பைஸ் ஸ்டைல் இணையதளத்தில் பொருட்கள் வாங்கும் போது உங்கள் கார்ட் விலையில் 30 சதவீதம் வரையிலும் மட்டுமே ஆஃபர் கிடைக்கும். இந்த வவுச்சரை பிற ஆஃபர்களுடன் சேர்த்துப் பயன்படுத்த முடியாது. எனவே நீங்கள் வாங்கிய விமான டிக்கெடின் விலை 2000 ரூபாய் என்றால் உங்களது காட்டில் 6500 ரூபாய்க்குப் பில் வருகிறது என்றால் கிட்டத்தட்ட 2000 ரூபாய் வரை சலுகை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications