மத்திய அரசு பிப்ரவரி 1-ம் தேதி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டினை வாசிக்க உள்ளது. இந்தப் பட்ஜெட்டில் கிராமங்கள், விவசாயம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வாய்ப்புகள் உள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பட்ஜெட் 2018-ல் விவசாயிகள், கிராமப் புற வேலை வாய்ப்புகள் மற்றும் கட்டுமானம் போன்றவற்றில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்த உள்ளதாக நிதி அமைச்சகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்று இருந்தாலும் விவசாய வருமானம் வீழ்ச்சி மற்றும் வேலைகள் இல்லா திண்டாட்டம் போன்றவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதைக் காண முடிந்தது.
எனவே 2018-2019 இடைப்பட்ட காலத்தில் மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி 2019-ம் ஆண்டு மீண்டும் மத்தியில் ஆட்சியினைப் பிடிக்கவே மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications