அபுர்வமாக ஏதேனும் நடக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? முத்தையா நாடாரின் கதை உங்களுக்கு அந்த நம்பிக்கையினை அளிக்கும். உத்திர பிரதேசம் ராய் பரேலி மாவட்டத்தில் வசித்து வந்த முத்தையா நாடாரை சுவாமி பாஸ்கர் ஸ்வரூப் ஜி மகாராஜ் என்பவர் அங்கோரம் பள்ளி அருகில் பார்த்துள்ளார்.
முத்தையாவின் ஏழ்மையான தோற்றத்தினைப் பார்த்து ஸ்வாமி பாஸ்கர் இவர் பிச்சைக்காரர் ஆக இருக்கலாம் என்று நினைத்துள்ளார். பேச முடியாமல் பசியில் இருந்த மன நிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்த முத்தையவுக்கு உணவு வாங்கிக் கொடுத்து முடிகளை வெட்டி விட்டுக் குளிக்க வைத்துள்ளார்.
அதிர்ச்சி
அதற்கு இடையில் முத்தையாவின் ஆதார் கார்டு மற்றும் பிற ஆவணங்கள் அவருடன் ஆடைகளுடன் இருப்பதைக் கண்ட இவர்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு கோடி ரூபாய் ஆவணங்கள்
முத்தையாவின் ஆடைகளுக்கு இடையில் இவரது ஆதார் கார்டு மற்றும் 1,06,92,731 கோடி ரூபாய் மதிப்புடைய பிக்சட் டெபாசிட் ஆவணங்கள் இருந்துள்ளன. மேலும் இவரது ஆதார் விவரங்களை வைத்து விசாரணை செய்து பார்த்த போது இவர் தமிழ்நாட்டினை சேர்ந்த ஒரு பிஸ்னஸ் மேன், இவரது பெயர் முத்தையா நாடார், 240 பி, வடக்கு, நேரு, தீதியூர் பூகிலி, திருநெல்வேலி, தமிழ்நாடு, 627152 என்பது தெரியவந்துள்ளது.
ஆச்சர்யம்
முத்தையா நாடார் 1,63,93,000 (ஒரு கோடி அறுபத்து மூன்று லட்சம் தொண்ணூற்று மூவாயிரம்) ரூபாய் பணத்திற்குச் சொந்தக்காரர் என்று அங்கு இருந்தவர்கள் அறிந்து ஆச்சரியப்பட்டனர்.
தகவல்
இது குறித்து முத்தையாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் அவர்கள் விமானம் மூலம் ராய் பரேலி வந்து இவரை விமானத்திலேயே தமிழகம் கூட்டி வந்துள்ளனர்.
புனித யாத்திரை
குடும்ப உறுப்பினர்கள் கொடுத்துள்ள தகவலின்படி, நாடார் மற்றும் குடும்பத்தினர் ஜூன் மாதத்தில் புனித யாத்திரை சென்றதாகவும் அங்கு இவர் காணவில்லை என்றும் இவரை யாரேனும் போதை மருந்து அளித்துக் கடத்தி இருக்கலாம் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அனில் அம்பானி
ஓபி சைனி


Click it and Unblock the Notifications