2ஜி ஸ்பெக்டர்ம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சன் நெட்வெர்க் பங்குகள் 4.04 சதவீதம் உயர்ந்து 977.75 ஒரு பங்கு என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சன் நெட்வொர்க் மட்டும் இல்லாமல் டி பி ரியாலிட்டி, யூனிடெக் நிறுவனப் பங்குகளும் 20 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்துள்ளன.
2ஜி
மத்திய அரசில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பெரும் சூறாவளியை ஏற்படுத்திய ஊழல் இது என்று கூறப்பட்டு வந்தது. 2ஜி அலைக்கற்றை உரிமத்தை சட்டவிரோதமாகத் தனியார் நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலையில் தாரை வார்த்ததாகவும் ரூ.176,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முக்கியப் பங்கு ஆ ராசா அவர்களுக்கு உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
வழக்கில் சிக்கியிருந்தவர்கள்
இந்த ஊழலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா, திமுகத் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி ராஜாத்தி உள்படப் பலர் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
தீர்ப்பு
தற்போது வியாழக்கிழமை டெல்லி சிபிஐ நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுகத் தொண்டர்கள் வெடி வெடித்தற்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications