2ஜி வழக்கில் சிக்கிய முக்கியத் தலைகள்..!

ஒட்டுமொத்த இந்தியாவை அதிரவைத்த 2ஜி வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியாகி இதில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களான முன்னாள் டெலிகாம் துறை அமைச்சர் ஆ.ராஜா, திமுகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குற்றமற்றவர்கள் என நிதிபதி ஓபி.சைனி தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் 2ஜி வழக்கில் சிக்கிக்கொண்ட முக்கியத் தலைகள் யார் என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

டெலிகாம் துறை

டெலிகாம் துறை

மத்திய டெலிகாம் அமைக்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா, முன்னாள் டெலிகாம் துறை செயலாளர் சித்தார்த் பெஹூரா, ராஜாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்கே சந்தோலியா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கனிமொழி

கனிமொழி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு கருணாநிதி அவர்களின் மகள் முக.கனிமொழியும் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பில் இவரும் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, இதில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ளார்.

மேலும் கனிமொழி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 சுவான் டெலிகாம்

சுவான் டெலிகாம்

இவ்வழக்கின் முக்கியமாகச் சுவான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர்களான சாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோங்கா ஆகியோரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

யுனிடெக்

யுனிடெக்

யுனிடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டி. சஞ்சய் சந்திராவும் இந்த வழக்கின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

கெளதம் தோஷி

கெளதம் தோஷி

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் கெளதம் தோஷி இந்த வழக்கின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் குழுமம்

அதேபோல் ரிலையன்ஸ் குரூப்-இன் தலைவர் சுரேந்தர் பிப்பாரா, துணைத் தலைவர் ஹரி நாயர் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டனர்.

குசேகுவான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜ்டெபிள்ஸ்

குசேகுவான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜ்டெபிள்ஸ்

இந்நிறுவனத்தின் தலைவர்களான ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது 2ஜி வழக்கின் கீழ் குற்றம்சாட்டப்பட்டனர்.

சரத் குமார்

சரத் குமார்

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான கலைஞர் டிவி-யின் தலைவர் சரத் குமாரும் இவ்வழக்கின் முக்கியமான குற்றவாளியாகக் கருதப்பட்டார். தற்போது குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாலிவுட் தயாரிப்பாளர்

பாலிவுட் தயாரிப்பாளர்

மேலும் இவ்வழக்கில் காரிம் மூரானி என்ற பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது.

3 முக்கிய நிறுவனங்கள்

3 முக்கிய நிறுவனங்கள்

இவ்வழக்கில் 3 முக்கிய நிறுவனங்களின் பெயர் அடிப்பட்டது. அவை ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் மற்றும் யூனிடெக் வையர்லெஸ் லிமிடெட் (தமிழ்நாடு) ஆகிய நிறுவனங்கள் மீது குற்றம்சு மத்தப்பட்டது.

தீர்ப்பு

தீர்ப்பு

2008ஆம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சிஏஜி அமைப்பின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 1,76,645 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படவில்லை, இந்த ஏலத்தின் மூலம் 30,984 கோடி ரூபாய் அளவில் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனச் சிபிஐ விசாரணை கூறியுள்ளதுள்ளது.

இதனை மையமாக வைத்து வியாழக்கிழமை ஓபி சைனி அறிவித்த தீர்ப்பில் 2ஜி வழக்கின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர் என அறிவித்துப் பல வருட வழக்கு முடிவிற்கு வந்தது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+