இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வராக்கடன் அளவு கடந்த இரு வருடத்தில் 47 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வராக்கடன்
மார்ச் 2015 முதல் மார்ச் 2017 இந்த இடைப்பட்ட காலத்தில் கல்விக் கடன் பிரிவில் இருந்த வராக்கடன் அளவு 3,536 கோடி ரூபாயில் இருந்து 5,192 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
5 முக்கிய வங்கிகள்
இதில் 5 முக்கிய வங்கிகளின் வராக்கடன் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் யூகோ வங்கி, இந்திய வங்கி ஆகியவை அதிகளவிலான வராக்கடன் அளவை வைத்துள்ளது.
கடன் புழக்கம்
மேலும் கடந்த 2 வருட காலத்தில் இப்பிரிவில் கடன் புழக்கமும் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
கடன் உத்தரவாதம்
கல்விக் கடனுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கொடுக்கப்படுவதால், வங்கிகள் இதனைக் கொடுக்க மறுத்து வருகிறது. மேலும் இப்பிரிவில் வராக்கடன் அளவு உயர்வதற்கும் இதுவும் மைய கருத்தாக உள்ளது என வங்கி தரப்புக் கூறுகிறது.


Click it and Unblock the Notifications