வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் இருக்கும் வங்கிகளும் அதிகளவிலான தொழில்நுட்பகளைப் பயன்படுத்தி ஊழியர்களை எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. இத்தகைய நிலை தற்போது தனியார் நிறுவனங்களில் அதிகமாக இருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனங்களிலும் கூடிய விரைவில் வரும்.
இதன் மூலம் வங்கித்துறையில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் பேர் வெளியேற்றப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், இவர்களுக்கு அதிகளவிலான வரிப் பயன்கள் இருக்கும் காரணத்தாலும் வங்கி சேவை பெறும் மூத்த குடிமக்களுக்கு ஏதுவாக வழியை அமைக்கத் திட்டமிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
70வயது முதியோர்
இந்நிலையில் 70 வயது முதியோர்கள் அனைவருக்கும் வங்கிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று அவர்களுக்கான சேவையை அளிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதனை அனைத்துத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் கட்டாயப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
வேலைக்கு உத்தரவாதம்..
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கிகள், இந்தச் சேவையை நடைமுறைப்படுத்த புதிய ஊழியர்களையும், அவர்களுக்கான திறன் தேவையையும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பணிநீக்கம்
இதனால் வங்கி நிர்வாகம் தற்போது வங்கி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் இப்புதிய சேவையில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வங்கி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைக்கும்.
பந்தன் வங்கி
இந்தியாவில் புதிதாக வங்கி சேவையைத் துவங்கியுள்ள பந்தன் வங்கி தற்போது 501 கிளைகளில், 2,022 டோர்ஸ்டெப் சேவை மையங்களை வைத்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கையை 2,547 மையங்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இச்சேவைக்காக 2017-18ஆம் ஆண்டில் 5,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
ஐடிஎப்சி வங்கி
பந்தன் வங்கியைப் போலவே ஐடிஎப்சி வங்கியும் தற்போது இந்தியாவில் சுமார் 7,000 இடங்களில் டோர் ஸ்டெப் சேவையை அளித்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications