உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் இந்தியாவில் தனது வர்த்தகச் சந்தையை விரிவாக்கும் செய்யும் முயற்சியாக 1 பில்லியன் யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 7,600 கோடி ரூபாய் அளவிலான தொகை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் முதலீடு கார் தயாரிப்பில் இருக்கும் ஹூண்டாய், மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா நிறுவனங்களுக்குக் கூடுதலான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டம்
இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்கள் கவரும் திட்டத்தில் போட்டி குறைவாக இருக்கும் பிரிவிலும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பிரிவிலும் அதிகளவிலான மாடல்களை அறிமுகம் செய்யவும் வோக்ஸ்வாகன் திட்டமிட்டுள்ளது.
விரிவாக்க பணிகள்
மேலும் இந்த முதலீட்டில் தற்போது புனே சகன் பகுதியில் இருக்கும் உற்பத்தி ஆலையில் விரிவாக்கம் செய்யவும், அதனைத் தொடர்ந்து இன்ஜினியரிங் சென்டர், டெவலப் பிராடெக்ட்ஸ் ஆகியவற்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வும் அதிகரித்துள்ள நிலையிலும், நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இத்துறை சார்ந்த தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், வோக்ஸ்வாகன் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு மற்றும் உற்பத்தியிலும் இந்த முதலீட்டின் வாயிலாகக் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
2 சதவீத சந்தை
இந்தியாவில் வோக்ஸ்வாகன் 10 வருடங்களுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்து வந்தாலும், வெறும் 2 சதவீத வர்த்தகச் சந்தையை மட்டுமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய திட்டத்தின் வயிலாகக் கூடுதல் ஆதிக்கத்தை வோக்ஸ்வாகன் பெறும்.


Click it and Unblock the Notifications